

பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு குதிரைப்படை அனுப்பி வைக்க வேண்டும் என பிஹார் அரசு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.
பிஹாரின் பாட்னா, பக்ஸர், வைஷாலி, போஜ்பூர், ககரியா, சஹர்சா, தர்பங்கா, போஜ்பூர், பாகல்பூர், பேகுசராய், முங்கேர், லக்கிசராய் மற்றும் சிவான் பகுதி களில் கங்கை நதியில் நீர் வற்றிய மணல்மேடுகள் ஏற்படும் இடங்க ளில் பயிர் செய்து பிழைக்கும் பல கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதியை பிஹார்வாசிகள் ’கங்கா தியாரா’ என அழைக்கிறார்கள்.
இங்கு கண்காணிப்புக்காக படகுகளிலும் காவல்நிலைய கிளை கள் இயங்குகின்றன. சட்டம் ஒழுங்கு மோசமான பகுதியாகக் கருதப்படும் இங்கு, பயிர்கள் அறு வடை செய்யப்பட்ட பின் அவற் றைக் குதிரைகளில் வரும் கொள் ளைக்காரர்கள் கொள்ளையடித்துச் செல்லும் சம்பவங்கள் வெகு சாதாரணம்.
இந்த கொள்ளைக்காரர்களை தேர்தல் சமயங்களில் அரசியல் வாதிகள் பயன்படுத்திக் கொள்கின் றனர். இங்குள்ள வாக்குச்சாவடி களை கைப்பற்றி, குறைந்த அளவு நீரில் குதிரையில் அமர்ந்தபடி கொள்ளைக்காரர்கள் தப்பி விடுவர். அவர்களை காவல் துறை யினர் வாகனங்களில் பின்தொடர் வது சிரமம். இதனால், தேர்தல் சமயங்களில் குதிரைப்படை காவல் துறையினர் இங்கு பணி யமர்த்தப்படுவர்.
இது குறித்து ’தி இந்து’விடம் பிஹார் மாநில காவல்துறை தலை வர் பிரமோத் குமார் தாக்கூர் கூறும் போது, ‘கங்கா தியாரா பகுதிகளில் சில வாக்குச்சாவடிகள் அமைந் துள்ளன. இங்கு காவலர்களால் சாதாரணமாக போக முடியாது. இதற்கு தேவையான குதிரைப் படைகளை கூடுதலாக அளிக்கும் படி மத்திய உள்துறை அமைச்சகத் துக்கு கடிதம் எழுதிக் கேட்டிருக் கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
பிஹார் காவல் துறையில் தற் போது 59 குதிரைகள் மட்டுமே உள்ளன. இதை வைத்து கங்கா தியாரா பகுதி தேர்தலை சமாளிப் பது கடினம். எனவே, மேலும் 60 முதல் 70 குதிரைகள் தேவை என மாநில அரசு கோரிக்கை விடுத் துள்ளது.
உ.பி.யிலிருந்து தேர்தல் பணிக் காக தற்காலிகமாக குதிரைகளைப் பெற்றுக் கொள்ளும்படி மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், பிஹார் சட்டப்பேரவை தேர்தலின்போது தான் உத்தரப்பிரதேசத்திலும் ஊராட்சித் தேர்தல் நடைபெற இருப் பதாக கூறப்படுகிறது. எனவே, அங்கிருந்து குதிரைகளைப் பெறு வது இயலாத காரியம் என்ப தால் உள்துறையின் பரிந்துரையை பிஹார் நிராகரித்துள்ளது.