ஐ.நா. தூதர்களாக ஏ.ஆர். ரஹ்மான், அக் ஷய், ஹிருத்திக் ரோஷன் நியமனம்

ஐ.நா. தூதர்களாக ஏ.ஆர். ரஹ்மான், அக் ஷய், ஹிருத்திக் ரோஷன் நியமனம்
Updated on
1 min read

ஐ.நா. சபையின் லட்சிய திட்டங் களை விளம்பரப்படுத்தும் பிரச்சார தூதர்களாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், பாலிவுட் நடிகர் அக் ஷய் குமார், ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர்.

வறுமை ஒழிப்பு, உணவுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாது காப்பு, எரிசக்தி பாதுகாப்பு, பாலின பாகுபாடு களைதல், அனைவருக் கும் சமவாய்ப்பு உள்ளிட்ட 17 அம்சங்களை, லட்சிய இலக்கு களை ஐ.நா. சபை நிர்ணயம் செய் துள்ளது. இவை குறித்து மக்களி டம் எடுத்துரைக்க சர்வதேச அள வில் பிரபலமானவர்களை பிரச்சார தூதுவர்களாக ஐ.நா. சபை நியமித்து வருகிறது. அந்த பட்டியலில் ஆஸ்கர் விருது வென்ற இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், பாலிவுட் நடிகர் அக் ஷய் குமார், ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் இணைந்துள்ளனர்.

அவர்கள் தவிர அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் உட்பட பலர் விளம்பர தூதர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in