Last Updated : 11 Aug, 2020 09:56 AM

 

Published : 11 Aug 2020 09:56 AM
Last Updated : 11 Aug 2020 09:56 AM

கட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை என்றால் எத்தனை நாட்களுக்கு இப்படியே போக முடியும்?-சசி தரூர் கேள்வி

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி மறு நியமனம் செய்யப்பட்டு ஓராண்டு காலம் நிறைவேறப் போவதையடுத்து சசி தரூர், சோனியா மீது தலைமைச் சுமையை காலவரையரையின்றி சுமத்துவது அவருக்கு நியாயம் செய்வதாகாது என்றார்.

ஏ.என்.ஐ. செய்திக்கு சசி தரூர் அளித்த பேட்டியில் கூறுகையில், ''கட்சியை முன்னேற்றிச் செல்வதில் தலைமை பற்றி நாம் தெளிவாக முடிவெடுப்பது நலம். கடந்த ஆண்டு சோனியாஜியை கட்சித் தலைமைக்கு இடைக்காலப் பொறுப்பாக நியமித்ததை வரவேற்றேன். ஆனால் காலவரையின்றி அவரையே தலைமைச் சுமையைத் தாங்கச் சொல்வது அவருக்கு செய்யும் நியாயமாக இருக்காது.

ராகுல் காந்தி தலைமைப் பொறுப்பைத் தொடங்க வேண்டுமென்றால் அவர் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறவேண்டும் அவ்வளவே.

ஆனால், ராகுல் காந்தி தலைமைப் பொறுப்புக்கு வர விரும்பவில்லை என்றால் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எழுப்பும் கேள்வி என்னவெனில் ‘நாம் எத்தனை நாட்களுக்கு இப்படியே போக முடியும்?’ என்பதாகவே இருக்கும். இது தொடர்பாக விரைவில் ஒரு தெளிவான முடிவை எடுக்க வேண்டும்'' என்கிறார் சசி தரூர்.

அபிஷேக் மனு சிங்வி கூறும்போது, “சோனியா காந்தி தலைவர், முறையான வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படும் வரை அவரே தொடர்வார். அதாவது பிரச்சினை என்னவெனில் தலைமை இல்லாமல் எந்த ஒரு கட்சியும் வெற்றிடத்தில் இயங்க முடியாது. நாளை சோனியாவின் பதவிக்காலம் முடிகிறது என்பது உண்மைதான், ஆனால் முறையான வழிமுறைகளும் விரைவில் மேற்கொள்ளப்பட்டு முடிவெடுக்கப்படும் வரை சோனியாஜி தொடர்வதுதான் சரி” என்றார்.

சச்சின் பைலட் விவகாரம் குறித்து சசி தரூர் கூறும்போது, “சச்சின் பைலட்டின் வருத்தங்கள் என்னவேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவர் ஒரு கட்டத்தில் கூட கட்சிக்கு எதிராகச் செயல்படவில்லை. மாநிலத்தின் குறிப்பிட்ட பிரச்சினைகள் குறித்து அவர் முன்வைத்தார்.

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட பிரச்சினைகளின் சிக்கல்தானே தவிர இது காங்கிரஸ் கட்சியை மறுப்பதாகாது. எனவே காங்கிரஸின் மிகப்பெரிய திறமையான சச்சின் பைலட்டைத் தக்க வைக்க நிறைய காரணங்கள் உள்ளன.

எனவே சர்ச்சைகளுக்கு தீர்வு காண்பதே சரியான வழிமுறை. பாஜக ஆட்சியில் நாம் நடப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம், காங்கிரஸ் கட்சிதான் அவற்றைத் தடுக்க வேண்டும் அதுதான் தேசத்தின் மாற்றத்துக்கு நல்லது'' என்று சசி தரூர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x