

ஊதிய உயர்வு, பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆஷா பணியாளர்கள் எனப்படும் துப்புரவுப் பணியாளர்கள் நேற்று முன்தினமும் நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதிலும் 10 சங்கங்கள் சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சுமார் 6 லட்சம் பேர் பங்கேற்றனர். கோரிக்கைகள் ஏற்கப்படாவிடில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டர் பதிவில், “நாடு முழுவதிலும் வீட்டுக்கு வீடு சென்று ஆஷா பணியாளர்கள், குப்பைகளை சேகரிக்கின்றனர். சுகாதாரத்துக்கான போரில் அவர்கள் உண்மையான போராளிகள். தற்போது அவர்கள் தங்கள் உரிமைக்காக வேலைநிறுத்தம் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்த விவகாரத்தில் வாய் பேச இயலாத அரசாக மத்திய அரசு இருந்தது. தற்போது கண் பார்வையற்ற, காது கேளாத அரசாகவும் மாறியுள்ளது” என்று கூறியுள்ளார்.