

மத்திய வேளாண் துறையின், 'வேளாண் உள்கட்டமைப்பு நிதி' திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் கோடி நிதி உதவித் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. அது தொடர்பான அறிவிப்பை பிரதமர் மோடி இன்று வெளியிட உள்ளார்.
அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை உள்கட்டமைப்பு மற்றும் குளிர்சாதன சேமிப்பு மையங்கள், சேகரிப்பு மையங்கள், செயலாக்க அலகுகள் போன்ற சமூக விவசாய சொத்துகளை உருவாக்குவதற்கு இந்த நிதி ஊக்கமளிக்கும். இந்த சொத்துகள் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு அதிக மதிப்பைப் பெற உதவும்.
பல்வேறு கடன் வழங்கும் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து இந்த ரூ.1 லட்சம் கோடி நிதி வழங்கப்படும். இந்த திட்டங்களின் நம்பகத்தன்மையை அதிகரிக்க 3 சதவீத வட்டிக் குறைப்பு மற்றும் ரூ. 2 கோடி வரை கடன் உத்தரவாதம் பயனாளிகளுக்கு வழங்கப்படும். - பிடிஐ