

இந்தியாவில் தொடர்ந்து 4 வது நாளாக 24 மணி நேரத்தில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட கரோனா தொற்று மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதிக்கப்பட்டுள்ளன.
மத்திய மற்றும் மாநில, யூனியன் பிரதேச அரசாங்கங்களின் நிலையான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு ஒரு சான்றாக, தொடர்ச்சியாக நான்காவது நாளாக ஒவ்வொரு நாளும் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட கோவிட்-19 மாதிரிகளை சோதனை செய்த வரலாற்றை இந்தியா தொடர்கிறது.
நாடு முழுவதும் விரிவாக்கப்பட்ட கண்டறியும் ஆய்வக வலையமைப்பு மற்றும் எளிதான சோதனைக்கான வசதி பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது, கடந்த 24 மணி நேரத்தில் 6,39,042 சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், இந்தியா தற்போது 2,27,88,393 சோதனைகளை செய்துள்ளது. Test per million (TPM) 16513 ஆக அதிகரித்துள்ளது.
ஏழு நாளாக தொடர்ந்து நடத்தப்பட்ட தினசரி சோதனைகளில் ஜூலை 14, 2020 அன்று சராசரியாக சுமார் 2.69 லட்சமாக இருந்தது, ஆகஸ்ட் 6, 2020 அன்று சுமார் 5.66 லட்சமாக அதிகரித்துள்ளது.