காங்கிரஸ்- சீன கம்யூனிஸ்ட் கட்சி 2008-ல் ஒப்பந்தம்? என்ஐஏ விசாரிக்கக் கோரும் மனு: உச்ச நீதிமன்றம் ஏற்க மறுப்பு

காங்கிரஸ்- சீன கம்யூனிஸ்ட் கட்சி 2008-ல் ஒப்பந்தம்? என்ஐஏ விசாரிக்கக் கோரும் மனு: உச்ச நீதிமன்றம் ஏற்க மறுப்பு
Updated on
1 min read

காங்கிரஸ் கட்சிக்கும், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே கடந்த 2008-ம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தை என்ஐஏ அல்லது சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சேவியோ என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுவைப் பரிசீலித்த தலைமை நீதிபதி, ''சீன அரசுடன் ஒரு அரசியல் கட்சி ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறுகிறீர்களா? எவ்வளவு பொருத்தமற்றதாக உள்ளது.

இந்த மனுவைத் திரும்பப் பெற நாங்கள் அனுமதிக்கிறோம். இருப்பினும், இந்த வாதத்தில் நீங்கள் தெரிவிக்க வேண்டிய குற்றச்சாட்டுகளைக் கூறவேண்டும். நீங்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் முன்னெப்போதும் கேள்விப்படாத வகையில் உள்ளதே?'' என்று தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ரமேஷ் ஜெத்மலானி, இந்த விவகாரம் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் தொடர்புடையதாக உள்ளது என்றார்.

இதனையடுத்து நீதிபதிகள், மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்ததுடன், வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றத்தை நாடுங்கள். மனுவைத் திரும்பப் பெற அனுமதிக்கிறோம் எனத் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in