Published : 07 Aug 2020 03:03 PM
Last Updated : 07 Aug 2020 03:03 PM

கர்நாடகாவிலும் நிலச்சரிவு: குடகு பகுதியில் கனமழையால் கடும் பாதிப்பு

பெங்களூரு

கர்நாடகாவில் குடகு உள்ளிட்ட இடங்களில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பருவநிலை காரணமாக காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஒன்று உருவாகியுள்ளது. அது இயல்பான நிலைக்கு தெற்கே உள்ளது. அது மேற்கு பகுதியிலிருந்து ஆகஸ்ட் 8, 2020 முதல் படிப்படியாக வடக்கு நோக்கி நகர்ந்து இமயமலையின் அடிவாரத்தை நோக்கிச் செல்ல வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. குஜராத் மாநிலம், கொங்கன் & கோவா மற்றும் மத்திய மகாராஷ்டிராவில் பரவலாக கனமான முதல் மிக கன மழை வரை பெய்கிறது.

கர்நாடக மாநிலத்திலும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. குடகு, சிக்கமகளூரு, ஹசன் உள்ளிட்ட மலைநாடு பகுதிகள் மற்றும் வட கர்நாடகத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. பல இடங்களில் சாலைகள், பாலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் அதிக மழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டது. சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி, மூடிகெரே உள்ளிட்ட பகுதிகளில் சில வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.

குடகு மாவட்டத்தில் பல இடங்களில் கனமழைால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கு மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர்.
குடகு மாவட்டத்தில் மழை பாதித்த பகுதிகளை மாநில அமைச்சர் சோமண்ணா இன்று பார்வையிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x