யூபிஎஸ்சி தலைவராக பேராசிரியர் பிரதீப் குமார் ஜோஷி நியமனம்

கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Updated on
1 min read

மத்திய அரசு பணியாளர் தேர்வாணயத்தின் (யூபிஎஸ்சி) தலைவராகப் பொருளாதாரப் பேராசிரியர் பிரதீப் குமார் ஜோஷியை நியமித்து மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

தற்போது யூபிஎஸ்சி ஆணையத்தில் பிரதீப் குமார் ஜோஷி உறுப்பினராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தலைவராக இருந்து வரும் அரவிந்த் சக்சேனாவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதையடுத்து, பிரதீப் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத் தேர்வாணயத்தில் தலைவராக இருந்து பிரதீப் குமார் ஜோஷி அனுபவம் பெற்றவர். கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் யூபிஎஸ்சி தேர்வாணயத்தில் உறுப்பினராக ஜோஷி இணைந்தார்.

பிரதீப் குமார் ஜோஷி: கோப்புப் படம்
பிரதீப் குமார் ஜோஷி: கோப்புப் படம்

பிரதீப் குமார் ஜோஷியின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே 12-ம் தேதி முடிவடையும் சூழலில் அடுத்த 10 மாதங்களுக்குத் தலைவராக அவர் நீடிப்பார்.

தற்போது யூபிஎஸ்சி உறுப்பினர்களாக பிம் செயின் பாஸி, ஏர் மாரஷல் ஓய்வு ஐஏஎஸ் போன்சலே, சுஜாதா மேத்தா, மனோஜ் சோனி, சமிதா நாகராஜ், எம்.சத்யாவதி, பாரத் பூஷன் வியாஸ், டிசிஏ ஆனந்த், ராஜீவ் நயன் சவுபே உள்ளிட்டோர் உள்ளனர்.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட முக்கிய மத்திய அரசுப் பணிகளுக்குத் தேர்வு நடத்தி தேர்வு செய்வது யூபிஎஸ்சி பணியாகும். இந்தத் தேர்வில் முதனிலை, பிரதான தேர்வு, நேர்காணல் ஆகிய 3 தேர்வுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in