கரோனாவுக்கு எதிராக சரியான நேரத்தில் நடவடிக்கை: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தகவல்

கரோனாவுக்கு எதிராக சரியான நேரத்தில் நடவடிக்கை: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தகவல்
Updated on
1 min read

உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குநர்களின் மெய்நிகர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கரோனா வைரஸுக்கு எதிராக இந்தியா எடுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது:

தொடக்கத்தில் இருந்தே கரோனா வைரஸுக்கு எதிராக இந்தியா தரம்மிக்க நடவடிக்கைகளை எடுத்தது. கடந்த ஜனவரியில் முதல் நோயாளி கண்டறியப்படுவதற்கு முன்பாகவே மக்களுக்கு ஆலோசனைகளையும் கட்டுப்பாடுகளையும் வெளியிட்டது.

ஜனவரி 18 முதல், நாட்டின் 4 முக்கிய விமான நிலையங்களில் வெளிநாடுகளிலிருந்து வந்த பயணிகளை பரிசோதிக்கக் தொடங்கினோம். மார்ச் 6 முதல் அனைத்து பயணிகளும் பல்வேறு விமான நிலையங்களில் பரிசோதிக்கப்பட்டனர்.

இதையடுத்து மார்ச் 22 முதல் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கான விமான சேவை நிறுத்தப்பட்டது. உலகின் மிகப்பெரிய மற்றும் கடுமையான பொது முடக்கம் மார்ச் 25-ல் அமலுக்கு வந்தது.

இந்தியா, மக்கள் தொகை மிகுந்த நாடு. ஆனாலும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, கரோனா நோயாளிகள் இறப்பு எண்ணிக்கையை மிகக் குறைவாக வைத்திருக்க முடிந்தது. இவ்வாறு ஹர்ஷ் வர்தன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in