

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்தாண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்யபப்பட்டது. மேலும், அம்மாநிலம், லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.
ஜம்மு காஷ்மீரின் துணைநிலை ஆளுநராக குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரியான கிரிஷ் சந்திர முர்மு, அக்டோபர் 31-ம் தேதி நியமிக்கப்பட்டார்.ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் துணை நிலை ஆளுநர் என்ற பெயரைப் பெற்ற கிரிஷ் சந்திர முர்மு, 9 மாதங்களுக்குப் பின்னர் நேற்றுமுன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், புதிய துணைநிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா (61) நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான கடந்த அமைச்சரவையில், ரயில்வே துறையின் இணையமைச்சராக பதவி வகித்தவர் மனோஜ் சின்ஹா. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தின் காஸிப்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.