

உத்தரப் பிரதேசத்தில் பட்டாசு தயாரிக்கும் இடத்தில் நேற்று ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒரு சிறுமி உள்ளிட்ட 3 பெண்கள் மற்றும் ஒரு முதியவர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
கோசைகஞ்ச் நகரின் சைஃபுல்லாகஞ்ச் என்ற இடத்தில் ஒரு வீட்டில் பட்டாசு தயாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இங்கு நேற்று காஸ் சிலிண்டர் தீப்பற்றி வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அலீமுதின் (60), அன்வரி (55), குடியா (25), குஷ்பூ (13) ஆகிய 4 பேர் இறந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
“விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டாசு தயாரிக்கப்பட்டு வந்த வீடு இடிந்து தரை மட்டமானது” எனவும் போலீஸார் கூறினர்.