Last Updated : 06 Aug, 2020 02:11 PM

 

Published : 06 Aug 2020 02:11 PM
Last Updated : 06 Aug 2020 02:11 PM

காஷ்மீர் உள்நாட்டு விவகாரம்; இதில் தலையிடாதீர்கள்: ஐநாவில் சீனாவுக்கு இந்தியா கண்டனம் 


ஜம்மு காஷ்மீர் 370 பிரிவை ரத்து செய்தது என்பது எங்களின் உள்நாட்டு விவகாரம் . இதில் சீனா தலையீடக்கூடாது என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து 370 பிரிவை மத்திய அரச கடந்த ஆண்டு ரத்து செய்து, மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாப் பிரித்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான 370 பிரிவை ரத்து செய்துநேற்றுடன் ஓர் ஆண்டு நிறைவடைகிறது.

இந்த சூழலில் நேற்று சீனா வெளியுறவுத்துறை செயலாளர் அளித்த பேட்டியில் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்திருக்கக் கூடாது, ஜம்மு காஷ்மீருக்கான ஏற்கெனவே இருந்த நிலையை மாற்றியமைத்தது தவறு எனத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி இதேபோன்று ஐ.நா.கூட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் பிரச்சினை, ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை சீனா எழுப்ப முயன்றது, ஆனால் இந்த விவகாரம் எடுக்கப்படவில்லை.

இந்த சூழலில் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டம் அதிகாரப்பூர்வற்ற முறையில் மூடப்பட்ட அறையில் நேற்று நடந்தது.

அந்த கூட்டம் குறித்து ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப்பிரதிநிதி திருமூர்த்தி கூறுகையில் “ மூடப்பட்ட அறையில், அதிகாரப்பூர்வமற்று, பதிவு செய்யப்படாத வகையில் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சீனா ஆதரவுடன் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப முயன்ற பாகிஸ்தான் முயற்சி தோல்வி அடைந்தது.

கூட்டத்தில் இருந்த அனைத்து உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் ஜம்மு காஷ்மீர் விவகாரம் இரு நாடுகளின் தொடர்பான விவகாரம் இதை இங்கு கொண்டுவரத் தேவையில்லை “ எனத் தெரிவித்தனர்.

ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப முயன்ற சீனாவுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு விவகாரத்தில் சீனா தலையிடக்கூடாது என்று மத்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் “ ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மீண்டும் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை சீனா எழுப்ப முயன்றது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் சீனா தலையீடுவதை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் சீன தலையீடுவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்பும் பல சூழலில் இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட்டுள்ளது, அப்போது சீனாவுக்கு பெரும்பாலான நாடுகள் ஆதரவு தெரிவிக்கவில்லை, மிகச்சில நாடுகள் மட்டுமே ஆதரித்தன.

இதுபோன்று இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடும் பயனற்ற முயற்சிகளை சீனா கைவிட முழுமையாக முடிவு எடுக்கவேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x