Published : 06 Aug 2020 08:22 am

Updated : 06 Aug 2020 08:22 am

 

Published : 06 Aug 2020 08:22 AM
Last Updated : 06 Aug 2020 08:22 AM

நவீன இந்தியாவின் அடையாளம் ராமர் கோயில்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கருத்து

ramnath-govind
ராம்நாத் கோவிந்த்

புதுடெல்லி

ராம ராஜ்ஜியக் கொள்கைகளுக்கு சான்றாகவும், நவீன இந்தியாவின் அடையாளமாகவும் ராமர் கோயில் இருக்கும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜையும் அடிக்கல் நாட்டு விழாவும் நேற்று நடைபெற்றது. அப்போது வேத மந்திரங்கள் முழங்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.


இதுகுறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடித்தளம் அமைத்த அனைவருக்கும் வாழ்த்துகள். சட்டத்துக்கு இணங்க கட்டமைக்கப்பட்டிருப்பதால், இது இந்தியாவின் சமூக நல்லிணக்க உணர்வையும் மக்களின் வைராக்கியத்தையும் வெளிப்படுத்துகிறது. ராமர் கோயில் வளாகம், ராம ராஜ்ஜிய கொள்கைகளின் அடிப்படையில், நவீன இந்தியாவின் அடையாளமாக மாறும்" என பதிவிட்டுள்ளார்.


நவீன இந்தியாவின் அடையாளம்ராமர் கோயில்குடியரசுத் தலைவர்குடியரசுத் தலைவர் ராம்நாத்Ramnath govind

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author