Published : 05 Aug 2020 09:07 PM
Last Updated : 05 Aug 2020 09:07 PM

இந்தியாவில் 2-வது நாளாக 6 லட்சத்துக்கும் அதிகமான கரோனா பரிசோதனை

இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக, கடந்த 24 மணி நேரத்தில் 6 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன.

இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக, 6 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் நடைபெற்றுள்ளது. நோய்த் தொற்றை விரைந்து கண்டுபிடிக்கும் முதல் முக்கிய நடவடிக்கையாக, தீவிரப் பரிசோதனையைp பின்பற்ற வேண்டும் என மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுகள் உறுதிபூண்டுள்ளன.

இந்தியாவில், தினசரிப் பரிசோதனைகள் அபரிமிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தல் , வீடுகளில் தனிமைப்படுத்துதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நாட்டில் பரிசோதனைக் கட்டமைப்பு தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டு, மேற்கொள்ளப்படும் சோதனை உத்திக்கு, படிப்படியான, அதிக வரவேற்பு காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 6,19,652 பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

இதுவரை மொத்தம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை எண்ணிக்கை 2,14,84,402 ஆக உயர்ந்துள்ளது. 10 லட்சம் பேரில் சோதனை நடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 15568 என்ற அளவில் கணிசமாக அதிகரித்துள்ளது.

“பரிசோதனை, கண்டுபிடித்தல், சிகிச்சை அளித்தல்’’ உத்தியின் விரிவான அணுகுமுறையால், நாட்டின் பரிசோதனைக் கூடங்கள் கட்டமைப்பு தொடர்ந்து வலுபடுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் இன்று வரை 1366 சோதனைக்கூடங்கள் இயங்கி வருகின்றன.

இதில் 920 அரசு சோதனைக் கூடங்களாகும். 446 தனியார் ஆய்வகங்களிலும் சோதனை நடைபெறுகிறது. இதன் விவரம் வருமாறு;

ரியல்-டைம் ஆர்டி பிசிஆர் அடிப்படையிலான சோதனைக்கூடங்கள்: 696 (அரசு-421+ தனியார்- 275)

ட்ரூநேட் அடிப்படையிலான சோதனைக் கூடங்கள்: 561 (அரசு - 467+ தனியார்-94)

சிபிஎன்ஏஏடி அடிப்படையிலான சோதனைக் கூடங்கள்; 109 (அரசு-32+ தனியார்-77)


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x