ராமர் கோயில் வெற்றிகரமாகக் கட்டிமுடிக்கப்பட வேண்டி  பூரி ஜெகன்நாதர் கோயிலில் சிறப்பு பூஜை

ராமர் கோயில் வெற்றிகரமாகக் கட்டிமுடிக்கப்பட வேண்டி  பூரி ஜெகன்நாதர் கோயிலில் சிறப்பு பூஜை
Updated on
1 min read

அயோத்தியில் ராமர் கோயில் வெற்றிகரமாகக் கட்டிமுடிக்கப்பட வேண்டும் என்று பிரார்த்தனை மேற்கொண்டு ஒடிசா, பூரிஜெகன்நாதர் கோயிலில் இன்று சிறப்புப் பூஜை நடத்தப்பட்டது.

இது தொடர்பாக தலைமை தீட்சிதர் ஜனார்தன் பட்டோஜோஷி மொஹாபாத்ரா எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

எண்ணற்ற பக்தர்களின் பிரார்த்தனையும் தபஸும் வீண் போகவில்லை. அவர்களது பிரார்த்தனையும் தபஸும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு பூமி பூஜை மூலம் நிறைவேறியுள்ளது.

இதற்காக பூரிஜெகன்நாதர் கோயிலில் இன்று சிறப்புப் பூஜை நடத்தி, ராமர் கோயில் வெற்றிகரமாகக் கட்டி முடிக்கப்படவேண்டும் என்ற பிரார்த்தனையுடன் வேண்டிக்கொண்டோம்.

லட்சக்கணக்கான பக்தர்களின் பிரார்த்தனைகள் நிறைவேற வேண்டி இந்த சிறப்புப் பூஜையை நடத்தினோம்.

இன்று பூமி பூஜையில் பங்கேற்ற பிரதமர் மோடி, மோகன் பாகவத், ஆதித்யநாத், ஆனந்திபென் படேல் ஆகியோரும் முகக்கவசம் அணிந்து, சமூக விலகலுடன் பூஜையில் பங்கேற்றனர்.

தீட்சிதர்கள் வேத மந்திரங்களை முழங்கி, பூஜை பூஜையைத் தொடங்கினர். பூஜையில் பிரதமர் பக்தியுடன், மந்திரங்களை உச்சரித்தார். பூமி பூஜை முடிந்தபின் ராமர் கோயிலுக்காக 40 கிலோ எடையுள்ள முதல் வெள்ளி செங்கல்லை பிரதமர் மோடி தொட்டு வைத்து அடிக்கல் நாட்டினார்.

ராமர் கோயிலுக்கான பூமி பூஜை முடிந்தபின், அங்கிருந்தவர்கள் அனைவரும் ஹர ஹர மகாதேவ், பாரத் மாதாகி ஜே என்ற கோஷங்களை எழுப்பினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in