

ராமர் கோயிலின் பூமி பூஜையைப் பார்க்க நமக்கு வாய்த்திருப்பது இந்தியாவின் பெரிய அதிர்ஷ்டம் என்று யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
ராமஜென்ம பூமியில் பூஜைக்காக வந்திருக்கும் பாபா ராம்தேவ் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
நாமெல்லாம் ராமர் கோயில் பூமி பூஜையைப் பார்க்க வாய்த்திருப்பது இந்தியாவின் மிகப்பெரிய அதிர்ஷ்டம். இந்த நாட்டில் ராம ராஜ்ஜியம் நிறுவ பதஞ்சலி யோக பீடம் அயோத்தியில் பெரிய குருகுலம் தொடங்கும்.
இதில் உலகெங்கிலிருந்தும் வருபவர்கள் வேதம், ஆயுர்வேதம் கற்பார்கள்.
இந்த ஆகஸ்ட் 5ம் தேதி வரலாற்று சிறப்பு மிக்க நாள். பல தலைமுறைகள் பெருமையுடன் இந்த நாளை நினைவுகூரும். புதிய வரலாறு படைத்த இந்தத் தினத்தை கொண்டாட வேண்டும்.
ராமர் கோயில் கட்டப்படுவதன் மூலம் ராம ராஜ்ஜியம் நாட்டில் நிறுவப்படும். நாட்டில் கலாச்சாரம், நிதியியல், அரசியல் விவகாரத்தின் ஆக்ரமிப்புகள் முடியும்.
ராமர் கோயில் நாட்டில் புதிய கலாச்சாரத்தை உருவாக்கும்.
நரேந்திர மோடியைப் பிரதமராக அடைய நாம் கொடுத்து வைத்திருக்கிறோம். அவரே ராம, ஹனும பக்தர். இந்து தர்மத்துக்கு பெருமை சேர்க்கும் பிரதமர் என்றார் ராம்தேவ்.
இவருடன் சுவாமி அவ்தேஷாநந்த் கிரி, சிதானந்த் மஹாராஜ், ஆகியோரும் வந்திருந்தனர்.
“உலகம் முழுதுமே இந்தியாவைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. உலக ஒற்றுமை என்ற செய்தியை அறிவிக்கும் வரலாற்றுத் தினமாகும் இது” என்றார்.