Last Updated : 04 Aug, 2020 03:50 PM

 

Published : 04 Aug 2020 03:50 PM
Last Updated : 04 Aug 2020 03:50 PM

தப்லீக் ஜமாத்: வழக்கை ரத்து செய்யக் கோரும் அயல்நாட்டினர் மனுக்கள் மீது மத்திய அரசு, போலீஸிடம் பதில் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

தப்லீக் ஜமாத் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அயல்நாட்டினர் 23 பேர் மேற்கொண்ட தனித்தனியான 2 மனுக்களில் தங்கள் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர், இதற்கு மத்திய அரசு, போலீஸ் துறையின் பதில் என்ன என்று கேட்டு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

இவர்கள் விசா விதிமுறைகளை மீறி மிஷனரி வேலைகளில் ஈடுபட்டதாகவும், கரோனா கட்டுப்பாடுகளை மீறியதாகவும் தப்லீகில் கலந்து கொண்ட அயல்நாட்டினர் மீது வழக்கு தொடரப்பட்டன.

விசாரணையை மேற்கொண்ட டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி அனுப் ஜெய்ராம் பாம்பானி, அடுத்த விசாரணை தேதி ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் வழக்குகளை தள்ளுபடி செய்யக் கோரிய இவர்களது மனு மீது மத்திய அரசு, போலீஸார் பிரமாணப்பத்திரம் தாக்கல் செயய உத்தரவிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 10ம் தேதி இதே போன்று வழக்குகளை ரத்து செய்யக்கோரி மேற்கொள்ளப்பட்ட மனுக்கள் ஆகஸ்ட் 10ம் தேதி விசாரணைக்கு வருவதால் அதற்குள் மத்திய அரசு, போலீசார் தங்கள் பதில் அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து எஃப்.ஐ.ஆர்கள், குற்றப்பத்திரிகைகள் ஆகியவற்றின் ஒரு தொகுப்பை கோர்ட்டில் சமர்ப்பிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

டெல்லி போலீஸ் கிரைம் பிராஞ்ச் பதிவு செய்த எஃப்.ஐ.ஆரில். இந்த 23 அயல்நாட்டினரும் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். எனவே குறைந்தபட்ச தண்டனை அளிக்கக் கோரப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்பட்டது.

இவர்களை அவர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கும் உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் மீதான எஃப்.ஐ.ஆர். நிலுவையில் இருப்பதால் இவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்ல முடியவில்லை என்றும் இந்த தப்லீக் மாநாட்டு அயல்நாட்டினர் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் தெரிவித்தார்.

இந்த 23 அயல்நாட்டினரும் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இந்தோனேசியா, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

போலீஸார் தனித்தனியான எஃப்.ஐ.ஆர்களை ஒரே குற்றச்சாட்டுக்காக பதிவு செய்ய முடியாது என்ற வழக்கறிஞர், இவர்களுக்கு எதிராக லுக் அவுட் அறிவிக்கையும் இருப்பதால் இவர்களால் தங்கள் நாடுகளுக்கும் செல்ல முடியவில்லை. முதல் எஃப்.ஐ.ஆர் மார்ச் 31ம் தேதி பதிவு செய்யப்பட்டது. அடுத்த எஃப்.ஐ.ஆர். பிற்பாடு சேர்க்கப்பட்டது, மேலும் இது தொடர்பாக அயல்நாட்டினருக்கு தெரிவிக்கப்படவில்லை என்று வழக்கறிஞரக்ள் அஷிமா மண்டலா மற்ரும் மந்தாகினி சிங் ஆகியோர் வாதாடினர்.

பிற போலீஸ் நிலையங்களில் போடப்பட எஃப்.ஐ.ஆர்.கள் செல்லாது ஏனெனில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரைகை தொடர்பாக இவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டு குறைந்த பட்ச தண்டனை கோரப்பட்டுள்ளது என்று வழக்கறிஞர்கள் வாதாடினர்.

இந்த வழக்கு குற்றப்பிரிவு போலீஸாரால் விசாரணை செய்யப்பட்டது எனும்போது, அப்போதே இவர்களை நாட்டுக்கு அனுப்புமாறு உத்தரவு பிறப்பிக்கவும் பட்டது. எனவே இரண்டாவது எப்.ஐ.ஆர். செல்லுபடியாகாது என்று மனுதாரர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகத்தான் டெல்லி உயர் நீதிமன்றம் தற்போது மத்திய அரசும் போலீஸ் துறையும் ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x