‘ராமர், ராஷ்டிரம், ரொட்டி,  ஒன்றையொன்று நிறைவு செய்யும் கொள்கைகள்’- ஆக.15 எப்படி முக்கிய தினமோ அதே போல் நவ.9-ம் முக்கியமான தினம் - உ.பி. துணை முதல்வர் பேட்டி

உ.பி.முதல்வர் ஆதித்யநாத், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா.
உ.பி.முதல்வர் ஆதித்யநாத், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா.
Updated on
1 min read

ராமர் கோயிலுக்காக அயோத்தியில் ஆகஸ்ட் 5ம் தேதி பூமிபூஜை சடங்குகள், ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வரும் நிலையில் உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியா, கடவுள் ராமர், ராஷ்டிரம் என்கிற தேசம், உணவு அதாவது ரொட்டி ஆகிய மூன்று கொள்கைகளும் ஒன்றையொன்று நிறைவு செய்பவை என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பிடிஐ-க்கு அளித்த பேட்டியில், “ராம், ராஷ்ட்ரா (தேசம்), ரொட்டி (உணவு) ஆகியவை ஒன்றயொன்று நிறைவு செய்யும் கொள்கைகள் என்றே நான் பார்க்கிறேன். சுமார் 500 ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகு ராமஜென்மபூமியில் கோயில் எழுகிறது. இதற்காக எண்ணற்ற ராமபக்தர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர்.

பிரிட்டீஷாருக்கு எதிராக நடந்த விடுதலைப் போராட்டத்தினால் ஆகஸ்ட் 15, 1947-ல் விடுதலை பெற்றோம். அதே போல் நவம்பர் 9, 2019 அதற்குச் சமமான மிகவும் முக்கியமான நாள், உச்ச நீதிமன்றம் நவம்பர் 9ம் தேதி அளித்த தீர்ப்பின் மூலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வழிவகை பிறந்தது.

ஆனால், இப்போது ஆகஸ்ட் 5ம் தேதி மிக முக்கியமான தினமாகியுள்ளது, ஏனெனில் இந்தத் தேதியிலிருந்துதான் ராமருக்காக மகாபெரெஇய கோயில் எழுச்சி பெற திருப்பணிகள்தொடங்குகின்றன.

ராமருக்கான பெரிய கோயில் கட்டப்படுகிறது, இது நாடடை வலிமைப்படுத்தும் கோயில், தேசிய ஒருமைப்பாட்டின் குறியீடு. பிரிவினை சக்திகள் இதன் மூலம் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

இந்த பூமி பூஜையை நடத்தக் கூடாது என்பதற்காக பல தலைவர்கள் தேவையற்ற ஆலோசனைகளை வழங்குகின்றனர். இவர்களுக்கு ராமர் கோயில் கட்டப்படுவது விருப்பமில்லாத செயலாகும்.

இவர்கள்தான் எங்களை கேலி செய்தனர், இதே நபர்கள்தான் ராம்சேதுவை கேள்விக்குட்படுத்தினார்கள். அனைத்தும் கடவுள் ராமரின் விருப்பப்படிதான் நடக்கிறது, இதற்கு தடை போட முனையக் கூடாது, அல்லது ஏதும் எதிர்மறை ஆலோசனைகளையும் தவிர்ப்பது நல்லது” என்றார்.

உத்தவ் தாக்கரே, வீடியோ கான்பரன்சிங்கில் பூமி பூஜையை நடத்தலாம் என்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வினய் விஸ்வம் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கருக்கு எழுதிய கடிதத்தில் பூமி பூஜையை நேரடி ஒளிபரப்பு செய்வது, அதுவும் தூர்தர்ஷனில் செய்வது தேசிய ஒருமைப்பாட்டின் ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கைகளுக்கு எதிரானது என்று எதிர்த்து எழுதியிருந்தார்.

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஷரத் பவார், ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டிவிட்டால் கரோனா ஒழிந்து விடும் என்று சிலர் கருதுகின்றனர் என்று கிண்டல் செய்திருந்தார்.

இவர்களுக்குப் பதில் தரும் விதமாகவே உ.பி.துணை முதல்வர் மவுரியா இந்தப் பேட்டியளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in