

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 52 ஆயிரத்து 50 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18 லட்சத்து 55 ஆயிரத்து 745 ஆக அதிகரித்துள்ளது.
குணமடைந்தோர் எண்ணிக்கை 12 லட்சத்தை கடந்தது. பலி எண்ணிகை கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 803 ஆக மொத்த பலி எண்ணிக்கை 38,938 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
மொத்தமாக 12 லட்சத்து 30 ஆயிரத்து 509 பேர் குணமடைந்துள்ளனர். 5 லட்சத்து 86 ஆயிரத்து 298 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கோவிட்-19-இலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை 66.31% ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை விகிதம் 2.10% ஆக மேலும் குறைந்தது.
தொடர்ந்து 6வது நாளாக பாதிப்பு எண்ணிக்கை 50,000த்திற்கும் அதிகமாக இருந்து வருகிறது.
மொத்தமாக 2 கோடியே 8 லட்சத்து 64 ஆயிரத்து 750 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. திங்களன்று மட்டும் 6 லட்சத்து 61 ஆயிரத்து 892 சாம்பிள்கள் டெஸ்ட் செய்யப்பட்டுள்ளன. இதுவரை அதிக சாம்பிள்கள் டெஸ்ட் செய்யப்பட்டது நேற்றுதான்.
அரசு பரிசோதனைக்கூடங்கள் 917-ம் தனியார் பரிசோதனைக்கூடங்கள் 417-ம் உள்ளன.
மாநில வாரியாகப் பாதிப்பு எண்ணிக்கையில் மகாராஷ்டிரா தொடர்ந்து 4,50,196 தொற்றுக்களுடன் முதலிடத்தில் உள்ளது, இதில் 15,842 பேர் பலியாகியுள்ளனர், குணமடைந்தோர் எண்ணிக்கை 2,87,030.
இரண்டாம் இடத்தில் தமிழ்நாட்டில் 2,63,222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், குணமடைந்தோர் எண்ணிக்கை 2,02, 283, பலி எண்ணிக்கை 4,211.
ஆந்திராவில் பாதிப்பு எண்ணிக்கை 1,66,586. பலி எண்ணிக்கை 1537, குணமடைந்தோர் 88,672.
4ம் இடத்தில் கர்நாடகா, பாதிப்பு எண்ணிக்கை 1,39,571, பலி எண்ணிக்கை 2534, குணமடைந்தோர் 62,500.
டெல்லி அடுத்தபடியாக 1,38,482 பேர் பாதிப்பில் உள்ளது, 2230 பேர் பலி, 124,254 பேர் குணமடைந்தனர்.