Published : 04 Aug 2020 08:22 am

Updated : 04 Aug 2020 08:22 am

 

Published : 04 Aug 2020 08:22 AM
Last Updated : 04 Aug 2020 08:22 AM

அமித் ஷாவுடன் தொடர்பில் இருந்ததால் தனிமைப்படுத்திக் கொண்ட 3 அமைச்சர்கள்

amit-shah-tested-positive

புதுடெல்லி

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். டெல்லி அருகே, ஹரியாணாவின் குருகிராமில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அமைச்சர் அமித் ஷாவை கடந்தசனிக்கிழமை சந்தித்துப் பேசியதால், தன்னை தனிப்படுத்திக் கொண்டுள்ளதாக சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று அறிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “எனக்கு நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. இந்த தனிமைப்படுத்திக் கொள்ளுதல் முற்றிலும் நெறிமுறைகள் அடிப்படையிலானது. அவசரமாக மேற்கொள்ள வேண்டிய அலுவலகப் பணியை கவனிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதுபோல, அமித் ஷாவுடன் தொடர்பில் இருந்த மத்திய அமைச்சர்கள் பாபுல் சுப்ரியோவும் கஜேந்திர சிங் ஷெகாவத்தும் தங்களை தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர்.


Amit shah tested positiveதனிமைப்படுத்திக் கொண்ட 3 அமைச்சர்கள்அமித் ஷா

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author