

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட தினமான நாளை ஆர்ப்பாட்டம், போராட்டம் நடக்கலாம் என்று கருதப்படுவதால் ஸ்ரீநகரில் இன்று, அதாவது ஆக.4 மற்றும் நாளை ஆக.5 ஆகிய இருநாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை பிறப்பித்த ஸ்ரீநகர் மாவட்ட மேஜிஸ்ட்ரேட் கூறியிருப்பதாவது:
பிரிவினைவாதிகளும் பாகிஸ்தான் ஆதரவுக் குழுக்களும் நாளைய தினத்தை ‘கறுப்பு நாள்’ என்று அனுசரிக்கப்போவதாக தகவல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. எனவே ஆர்ப்பாட்டங்கள் இருக்காது என்று கூற முடியாது. பொதுச்சொத்துக்கும் மக்களுக்கும் ஆபத்து விளைவிக்கும் போராட்டம் நடக்கும் என்று குறிப்பிட்ட தகவல்கள் எச்சரித்துள்ளன. எனவே மருத்துவம் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கேயன்றி பிற மக்கள் நடமாட்டங்கள் இன்றும் நாளையும் தடை செய்யப்படுகின்றன. என்று கூறப்பட்டுள்ளது.