

இந்தியாவில் இரண்டு கோடிக்கு மேற்பட்ட கோவிட்-19 சோதனைகளை நடத்தி ஒரு மைல்கல்லை கடந்துள்ளது.
சோதனைகளின் எண்ணிக்கை 10 லட்சம் பேருக்கு 14,640 ஆக அதிகரிக்கிறது.இந்தியா இதுவரை 2,02,02,858 கோவிட்-19 மாதிரிகளை பரிசோதனை செய்துள்ளது. மத்திய அரசு மற்றும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கூட்டான மற்றும் தீவிரமான முயற்சிகளின் பலனாக, கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பை விரைவில் கண்டறிந்து, தனிமைப்படுத்துவதை உறுதிப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஐசிஎம்ஆர், பரிசோதனை உத்திகளை வகுத்து, இந்தியா முழுவதும் சோதனை கட்டமைப்பை விரிவுபடுத்தியுள்ளது. இந்த அணுகுமுறையை திறம்பட செயல்படுத்தி நாடு முழுவதும் அதிக பரிசோதனைகளை செய்யவும் மற்றும் மக்களிடையே பரவலான கோவிட் சோதனைகளை செய்யவும் வழி வகை செய்தது.
கடந்த 24 மணி நேரத்தில், 3,81,027 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன, சோதனைகளின் எண்ணிக்கை 10 லட்சம் பேருக்கு 14,640 ஆக அதிகரித்துள்ளது. இதனால் பத்து லட்சம் பேருக்கு சோதனைகளின் எண்ணிக்கை 14640 ஆகும். 24 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் நாட்டின் சராசரி அளவைவிட அதிகமான சோதனைகளை செய்துள்ளன.
நாட்டின் பரிசோதனைக் கூடங்களின் கட்டமைப்பு, தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு தற்போது 1348 ஆய்வகங்களாக உள்ளது; அரசு துறையில் 914 ஆய்வகங்களும், தனியார் துறையில் 434 ஆய்வகங்களும் இயங்கி வருகின்றன. அவற்றின் விவரம் பின்வருமாறு;
· ரியல் –டைம் ஆர்டி பிசிஆர் அடிப்படையிலான ஆய்வகங்கள்; 686 (அரசு-418 + தனியார்-268)
· ட்ரூநேட் அடிப்படையிலான ஆய்வகங்கள்; 556 (அரசு-465 + தனியார்-91)
· சிபிநேட் அடிப்படையிலான ஆய்வகங்கள் ; 106 (அரசு-31+ தனியார்-75)