Published : 03 Aug 2020 07:32 am

Updated : 03 Aug 2020 07:32 am

 

Published : 03 Aug 2020 07:32 AM
Last Updated : 03 Aug 2020 07:32 AM

டெல்லி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி

sonia-gandhi-discharged

டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று வீடு திரும்பினார்.

உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டில் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி விலகினார். சிகிச்சைக்காக அவர் அடிக்கடி அமெரிக்கா சென்று வந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 30-ம் தேதி இரவு டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டார்.


ஆனால் வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பரிசோதனைகள் முடிவடைந்த நிலையில் அவர் நேற்று பிற்பகல் 1 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் வீடு திரும்பினார். சோனியா காந்தியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


சோனியா காந்திடெல்லி மருத்துவமனைவீடு திரும்பினார்Sonia gandhi discharged

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author