Last Updated : 02 Aug, 2020 04:21 PM

 

Published : 02 Aug 2020 04:21 PM
Last Updated : 02 Aug 2020 04:21 PM

நாடு முழுவதும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கரோனா நோயாளிகள் குறித்த பதிவேடு தயாரிக்க முடிவு: ஐசிஎம்ஆர் திட்டம்

கோப்புப்படம்

புதுடெல்லி

நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கரோனா நோய்த் தொற்றுக்காக சிகிச்சை பெற்ற நோயாளிகள், கிசிச்சை பெற்றுவரும் நோயாளிகள் குறித்த பதிவேட்டை உருவாக்கி புள்ளிவிவரங்களைச் சேகரிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) திட்டமிட்டுள்ளது.

இந்தப் புள்ளிவிவரங்கள் மூலம் எதிர்காலத்தில் கரோனா நோயாளிகளுக்குச் சிறப்பாக சிகிச்சையளிக்க முடியும், கரோனா வைரஸின் தன்மை, வளர்ச்சி, உருமாறுதல், பாதிப்புகள், மனிதர்கள் உடலில் எந்தமாதிரியான பாதிப்பை ஏற்படுத்துகிறது குறித்து ஆய்வு செய்ய முடியும் என்று ஐசிஎம்ஆர் நம்புகிறது.

இந்த ஆய்வை ஐசிஎம்ஆர் அமைப்பு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், எய்ம்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுத்த உள்ளது. கரோனா நோயாளிகள் குறித்த பதிவேடு உருவாக்கப்படும்போது, ஆய்வாளர்களும், ஆட்சியாளர்களும் புரிந்துகொண்டு, பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுத்து கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு நம்பிக்கையளிக்கும் சிகிச்சையளிக்க முடியும்

இதுகுறித்து ஐசிஎம்ஆர் அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “நாடு முழுவதும் மருத்துவமனைகளில் கரோனாவுக்குச் சிகிச்சை பெற்ற, பெற்றுவரும் நோயாளிகளின் கிளினிக்கல் புள்ளிவிவரங்கள், அவர்கள் வாழிடம், இணை நோய்கள், சிகிச்சைக்குப் பின் அவர்களின் உடல்நிலை, உடலில் ஏற்படும் மாற்றங்கள் என அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கி புள்ளிவிவரம் சேகரிக்கப்பட உள்ளது.

கரோனா வைரஸ், சார்ஸ்-கோவிட் வைரஸ்கள் போன்றவை அறிந்திராத பல்வேறு அளவுருக்களைக் கொண்டுள்ளன. இதனால் அந்த நோயைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள மிகவும் தடையாக இருக்கின்றன.

முறைப்படி சேகரிக்கப்படும் புள்ளிவிவரங்கள், நாடு முழுவதும் பல்வேறு பிராந்தியங்களில் இருந்து கிடைக்கும் முழுமையான தகவல்கள், மூலம் ஆய்வாளர்களாலும், ஆட்சியாளர்களாலும் நோய் குறித்த புரிதலை சிறப்பாக ஏற்படுத்தும். கரோனா வைரஸ் எந்த நிலையில் இருக்கிறது, அதைத் தடுக்க எவ்வாறு எதிர்வினையாற்றுவது என்பதை முன்னெடுக்க வசதியாக இருக்கும்.

சண்டிகரில் உள்ள பிஜிஐஎம்இஆர் நிறுவனம், டெல்லி எய்ம்ஸ், ஜோத்பூர் எய்ம்ஸ், பெங்களூருவில் உள்ள நம்ஹான்ஸ், புனே ராணுவ மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை உள்பட 15 முக்கிய நிறுவனங்கள், 100 கோவிட் மருத்துவமனைகளில் இருந்து புள்ளிவிவரங்களைச் சேகரிக்க இருக்கின்றன” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x