

ஒரு தொற்று பரவும் ஆரம்ப கட்டத்தில், நாட்டின் மருத்துவ சிகிச்சை இக்கட்டான சூழலை எதிர்கொள்ளும் சூழலில், துல்லியமான சோதனைகள் மூலம் தொற்று பாதித்தவர்களைக் கண்டறிந்து , தனிமைப்படுத்த வேண்டிய நிலையில், எதிர்வரும் வாரங்கள், மாதங்களில் முன்கூட்டியே பாதிப்பை கணிக்க வேண்டியது அவசியமாகும்.
இதை வைத்து, நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவையான சிகிச்சை முறைகளைப் பயன்படுத்த வேண்டியது அவசியமாகும். இந்த பாதிப்புகள் பரவலாக நிலையற்ற அளவுருக்களுடன் வரும் போது, அவற்றை கணிப்பதற்கான மாதிரிகளை ஏற்படுத்துவது என்பதைப் பொறுத்தே மதிப்பீடு செய்ய முடியும்.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான, ஜவகர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையம், இந்திய அறிவியல் நிறுவனம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் மாதிரி ஒன்றை உருவாக்கியுள்ளனர். கோவிட்-19 தொற்றின் ஆரம்ப கட்டப் பரவலை உதாரணமாகக் கொண்டு, கையாளக்கூடிய மூலோபாயத்தைப் பயன்படுத்தி இதனை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.
இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்கு மிகவும் அவசியமான , சோதனைத் திறன்கள் மற்றும் தீவிர சிகிச்சை வசதிகளை அதிகரிப்பதற்கு தேவையான கணக்கீடான, மருத்துவத் தேவைகளின் முக்கிய அம்சங்களை மதிப்பிடுவதற்கு இந்த மாதிரியைப் பயன்படுத்தலாம். கோவிட்-19 தொற்றுக்கு வெகு பொருத்தமாக இது இருக்கக்கூடும். இந்த நோயின் இயல்பையும், மக்களிடம் அது ஏற்படுத்தும் மாற்றத்தையும் தெரிந்து கொள்ளும் வகையில், நோய் பரவும் வேகத்தைத் தடுப்பதுடன், இரண்டாவது அலை பரவாமல் மேற்கொள்ளும் மேலாண்மைக்குத் தேவையான விழிப்பு மற்றும் கண்காணிப்பை கணிப்பாளர்களுக்கு வழங்கும்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு: பேராசிரியர் சந்தோஷ் அன்சுமலியை (ansumali@jncasr.ac.in, 09449799801) மூலம் தொடர்பு கொள்ளலாம்.