Last Updated : 28 Sep, 2015 08:19 AM

 

Published : 28 Sep 2015 08:19 AM
Last Updated : 28 Sep 2015 08:19 AM

அரசு இணையதளம் முடக்கம் பாகிஸ்தானியர்கள் சதி? - கேரளாவில் அதிர்ச்சி

கேரள அரசின் இணையதளம் நேற்றுமுன்தினம் இரவு முடங்கி யது. இது பாகிஸ்தானியர்களின் சதி வேலையாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கேரள அரசின் www.keralagov.in. இணையதளத்துக்குள் சனிக்கிழமை இரவு மர்ம நபர்கள் ஊடுருவி உள்ளனர். இவர்கள் இந்த இணையதள செயல்பாட்டை முடக்கியதுடன், நமது தேசியக் கொடி எரிவது போன்ற படத்தையும் பாகிஸ்தான் ஆதரவு வாசகங்களையும் பதிவேற்றம் செய்துள்ளனர்.

எனவே, இது பாகிஸ்தானியர் களின் சதி வேலையாக இருக்கும் என்று இணையதள குற்றப் பிரிவு போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதுபற்றி மாநில காவல் துறையின் இணையதள குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து மாநில முதல்வர் உம்மன் சாண்டி தனது சொந்த ஊரான கோட்டயத்தில் செய்தியா ளர்களிடம் நேற்று கூறும்போது, “கேரள அரசின் இணையதளத்தில் மர்ம நபர்கள் ஊடுருவி முடக்கி இருப்பது மிக தீவிரமான பிரச்சினையாகும்” என்றார்.

எனினும், இந்த இணைய தளத்தின் சர்வர் ஊடுருவப்பட வில்லை என்றும் முடக்கப்பட்ட இணையதளத்தை சரி செய்வதற் கான நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருவதாகவும் மநில அரசின் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x