Published : 01 Aug 2020 10:03 PM
Last Updated : 01 Aug 2020 10:03 PM

வென்டிலேட்டர் ஏற்றுமதிக்கு அனுமதி; கரோனா இறப்பு வீதம் குறைந்ததால் மத்திய அரசு நடவடிக்கை

கரோனா இறப்பு வீதம் குறைந்து வருவதால் மத்திய அரசு வென்டிலேட்டர்களின் ஏற்றுமதியை அனுமதிக்க முடிவு செய்துள்ளது.

கோவிட் - 19 தொடர்பான அமைச்சர்கள் குழு (GOM) இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வென்டிலேட்டர்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் முன்மொழிவை பரிசீலித்து ஒப்புக் கொண்டுள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வென்டிலேட்டர்களை ஏற்றுமதி செய்வதற்கு வசதியாக மேலும் தேவையான நடவடிக்கைகளுக்காக இந்த முடிவு வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநருக்குத் (DGFT) தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குறிப்பிடத்தக்க முடிவானது, கோவிட்-19 நோயாளிகளின் இறப்பு விகிதத்தை படிப்படியாகக் குறைத்து வருவதைத் தொடர்ந்தும், அது தற்போது 2.15 சதவீதமாக உள்ளதன் காரணமாகவும், அதாவது குறைந்த எண்ணிக்கையிலான நோயாளிகளே வென்டிலேட்டர்கள் தேவைப்படும் நிலையில் உள்ளதாலும் எடுக்கப்பட்ட முடிவாகும். ஜூலை 31, 2020 நிலவரப்படி, நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 0.22 சதவீதம் மட்டுமே வென்டிலேட்டர்கள் தேவைப்படும் நிலையில் உள்ளனர்.

கூடுதலாக, வென்டிலேட்டர்களின் உள்நாட்டு உற்பத்தித் திறனில் கணிசமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஜனவரி 2020 உடன் ஒப்பிடும்போது, வென்டிலேட்டர்களுக்காக தற்போது 20க்கும் மேற்பட்ட உள்நாட்டு உற்பத்தியாளர்கள் உள்ளனர்.

கோவிட்-19 ஐ திறம்பட எதிர்த்துப் போராடுவதற்கும், உள்நாட்டில் அவை கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும் வென்டிலேட்டர்கள் மீதான ஏற்றுமதி தடை / கட்டுப்பாடு மார்ச் 2020 இல் விதிக்கப்பட்டது. 24.03.2020 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் DGFT அறிவிப்பு எண் 53க்கு ஏற்றுமதி செய்ய அனைத்து வகையான வென்டிலேட்டர்களும் தடை செய்யப்பட்டன.

இப்போது வென்டிலேட்டர்களின் ஏற்றுமதி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டு வென்டிலேட்டர்கள் வெளிநாடுகளில் இந்திய வென்டிலேட்டர்களுக்கான புதிய சந்தைகளைக் கண்டுபிடிக்கும் நிலை இருக்கும் என்று நம்பப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x