Published : 01 Aug 2020 08:13 PM
Last Updated : 01 Aug 2020 08:13 PM

மாநிலங்களவை எம்.பி. அமர்சிங் காலமானார்

மாநிலங்களவை எம்.பி. அமர்சிங், சிங்கப்பூர் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 64.

சமாஜ்வாதி கட்சி தலைவராக முலாயம் சிங் இருந்த வரை, அவருக்கு நெருக்கமானவராக இருந்தவர் அமர்சிங். அகிலேஷ் கட்சித் தலைவரான பின் அமர்சிங் ஓரங்கட்டப்பட்டார். அக்கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

பின்னர் 2011-ம் ஆண்டு ராஷ்ட்ரீய லோக் மஞ்ச் என்ற கட்சியை தொடங்கி 2012 சட்டப்பேரவை தேர்தலில் பெரும் தோல்வியடைந்தார். பின்னர் அஜித் சிங் கட்சியுடன் இணைந்து அமர்சிங் செயல்பட்டார்.

கடந்த சில மாதங்களாக, சிறுநீரக கோளாறு காரணமாக சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 2011 -ம் ஆண்டு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அமர் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x