Published : 21 May 2014 10:10 AM
Last Updated : 21 May 2014 10:10 AM

ஒடிசா முதல்வராக இன்று நவீன் பட்நாயக் பதவியேற்பு

ஒடிசா மாநில முதல்வராக பிஜு ஜனதா தளத்தின் தலைவர் நவீன் பட்நாயக் (67) இன்று பதவியேற்கிறார். தொடர்ந்து நான்காவது முறையாக அவர் இப்பதவியை வகிக்கவுள்ளார்.

புவனேஸ்வரில் உள்ள ஆளுநர் மாளிகையில், நவீன் பட்நாயக் மற்றும் அவருடன் அமைச்சர்களாக பொறுப்பேற்கவுள்ளவர்களுக்கு ஆளுநர் எஸ்.சி.ஜமீர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைப்பார்.

புதன்கிழமை காலை 10.10 மணிக்கு பதவியேற்பு விழாவை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட் டுள்ளதாக ஆளுநரின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால், பதவியேற்பு விழாவை ஆளுநர் மாளிகைக்கு வெளியே பெரிய திரைகளில் நேரடியாக ஒளிபரப்புச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையை சுற்றி போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம் என்று காவல் துறை ஆணையர் ஆர்.பி.சர்மா கூறினார்.

முதல் முறையாக 2000-ம் ஆண்டில் முதல்வர் பதவியேற்ற நவீன் பட்நாயக், தொடர்ந்து நான்காவது முறையாக இப்போது முதல்வராகிறார்.

இந்த தேர்தலில் மொத்தமுள்ள 147 சட்டமன்றத் தொகுதிகளில் 117-ல் பிஜு ஜனதா தளம் வெற்றி பெற்றுள்ளது. அதேபோன்று மாநிலத்தில் மொத்தமுள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் 20-ல் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x