

பஞ்சாபில் விஷச்சாராய அரக்கனுக்கு பலியானோர் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது.
இதில் டான்டரன் மாவட்டத்தில் மட்டும் 23 பேர் பலியாகியுள்ளனர். வெள்ளி இரவு வரை இந்த மாவட்டத்தில் இறப்பு எண்ணிக்கை மேலும் 19 ஆனது.
இந்நிலையில் உதவி கமிஷனர் குல்வந்த் சிங் கூறும்போது, டான்டரன் மாவட்டத்தில் மட்டும் 42 பேர் இறந்துள்ளனர். அமிர்தசரசில் 11 பேர். குருதாஸ்பூரின் பாட்டியாலாவில் 9 பேர் மரணமடைந்தனர்.
இதில் விஷ சாராயத்தினால் இறந்தார்கள் என்பதை குடும்பத்தினர் மறுத்தும் மறைத்தும் வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர், மாரடப்பினால் இறந்ததாக பொய் கூறுகின்றனர் என்கின்றனர் போலீஸ் அதிகாரிகள்.
சில குடும்பத்தினர் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்காமலேயே இறந்தவர்கள் உடலை எரித்து விட்டனர்.
மேலும் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த விஷச் சாராயம் தொடர்பாக மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.