Published : 01 Aug 2020 03:09 PM
Last Updated : 01 Aug 2020 03:09 PM

விசாகப்பட்டிணம் ஷிப்யார்டில் பெரிய கிரேன் விழுந்து விபத்து:  9 பேர் நசுங்கி பலி

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் உள்ள இந்துஸ்தான் ஷிப்யார்டில் ராட்சத கிரேன் ஒன்று உடைந்து விழுந்ததில் 9 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்.

தொழிலாளர்கள் இங்கு பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது பெரிய கிரேன் உடைந்து விழுந்ததில் 9 பேர் சிக்கி இறந்தனர் என்றும் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார் என்று போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் மீனா தெரிவித்தார்.

இந்த கிரேன் புதிது என்றும் சோதனை ஓட்டத்தில் இருந்த போது உடைந்து விழுந்தது. மல்கபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பிறகு வழக்குகள் சம்பந்தப்பட்ட பிரிவில் பதிவு செய்யப்படும் என்றார் கமிஷனர் ராஜீவ் குமார் மீனா.

ஊடகங்களிடம் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் எம்.ஸ்ரீநிவாச ராவ், தான் மாவட்ட ஆட்சியரிடம் பேசியதாகவும் அவர் சம்பவ இடத்துக்கு அதிகாரிகளை அனுப்பியதாகவும் தெரிவித்தார். முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம் இறந்தோர் குடும்பத்துக்கு நியாயமான நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

இதற்கிடையே சம்பவ இடத்துக்கு வந்த மக்கள் கூட்டம் தங்கள் உறவினர் எங்கே என்று கேட்டு வாசற்கதவருகே குவிந்துள்ளனர். உள்ளே இருக்கும் தங்கள் உறவினர் பற்றிய விவரங்களை போலீசாரோ, நிறுவன நிர்வாகிகளோ அளிக்க மறுப்பதாக மக்கள் தரப்பில் கடும் புகார்கள் எழுந்துள்ளன.

ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் நாட்டின்மிகப்பழமையான ஷிப்யார்ட் ஆகும். 1941ம் ஆண்டு தொழிலதிபர் வால்சந்த் ஹிராசந்தினால் உருவாக்கப்பட்டது.

1961-ல் இது தேசியமயமாக்கப்பட்டு ஹிந்துஸ்தான் ஷிப்யார்டு என்று பெயரிடப்பட்டது. இந்த ஷிப்யார்டு கப்பற்துறை அமைச்சகத்திலிருந்து பாதுகாப்பு அமைச்சகத்துக்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x