Last Updated : 01 Aug, 2020 12:27 PM

 

Published : 01 Aug 2020 12:27 PM
Last Updated : 01 Aug 2020 12:27 PM

1992-ம் ஆண்டு அயோத்தியில் கூடிய கரசேவகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டேன்- முன்னாள் உ.பி. முதல்வர் கல்யாண் சிங் பெருமிதம்

உ.பி. முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான கல்யாண் சிங்.

லக்னோ (உ.பி.)

1992-ம் ஆண்டு அயோத்தியில் கூடிய கரசேவகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தக் கூடாது என்று தான் உத்தரவிட்டதை நினைத்து பெருமையாக இருக்கிறது என்று உத்தரப் பிரதேச முன்னாள் பாஜக முதல்வர் கல்யாண் சிங் இப்போது கூறியுள்ளார்.

பாஜக முன்னாள் உ.பி. முதல்வர் கல்யாண் சிங் இது தொடர்பாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

1992-ம் ஆண்டு நான் மாநில முதல்வராக இருந்த போது அயோத்தியில் குழுமிய கரசேவகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டேன்.

அயோத்தி மாவட்ட நிர்வாகம் அப்போது சாகெட் கல்லூரி அருகே 4 பட்டாலியன் படைகள் நிற்பதாக எனக்கு எழுதினர், அங்கு கரசேவகர்கள் குழுமியிருக்கின்றனர் என்று எனக்கு எழுதிக் கேட்டுக்கொண்டனர்.

சூழ்நிலையை உணர்ந்த நான் அங்கு குழுமியிருந்த கரசேவகர்கள் 3 லட்சம் பேர் மீது துப்பாக்கிச் சூடு எக்காரணத்தை முன்னிட்டும் நடத்தக் கூடாது, வேறு வழிகளில் அவர்களை கட்டுப்படுத்துங்கள் என்றேன்.

ஏன் இந்த முடிவை எடுத்தேன் என்றால் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தால் பலர் உயிரிழந்திருப்பார்கள். நாடு முழுவதிலிருந்தும் மக்க்ள் வந்திருந்தனர், இதனால் ஏதாவது தப்பிதம் நடந்து விட்டால் அமைதியின்மை ஏற்பட்டு விடும்.

எனவே எனது உத்தரவினால் கரசேவகர் ஒருவர் கூட கொல்லப்படவில்லை, இதனை நினைத்து பெருமைப்படுகிறேன். ராமருக்காக எங்கள் ஆட்சி அப்போது வீழ்ந்ததைக் கண்டு வருத்தப்படவில்லை, பெருமையே படுகிறோம்.

ஆகஸ்ட் 5ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் பூமி பூஜை நடப்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் பொங்குகிறது. 1528-ம் ஆண்டு பாபரின் கமாண்டர் மிர் பாகி ராமர் கோயிலை இடித்து பாபர் மசூதியை ஏற்படுத்தினார். இது ஆன்மீக நோக்கங்களுக்காகச் செய்யப்பட்டதல்ல இந்துக்களை நோகடிக்க வேண்டும் என்பதற்காகவே செய்யப்பட்ட செயல். எனவே 500 ஆண்டுகாலப் போராட்டத்துக்குப் பிறகு இன்று ராமர் கோயில் இங்கு எழும்பவுள்ளது.

என்று கூறினார் முன்னாள் உ.பி. முதல்வர் கல்யாண் சிங்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x