Published : 31 Jul 2020 09:26 PM
Last Updated : 31 Jul 2020 09:26 PM

கேரளத்தில் புதிதாக 1,310 பேருக்குக் கரோனா தொற்று: சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தகவல்

கேரளத்தில் நேற்று நண்பகல் முதல் இன்று வரை 1,310 பேருக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டிருக்கும் செய்தி அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

''இன்றைய கரோனா தொற்று கணக்கில் வந்தவர்கள் 1,162 பேர் தொடர்பு மூலமும், 36 பேர் தொடர்புக்கான ஆதாரம் இல்லாமலும், 48 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களும், 54 பேர் பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்களும் ஆவர்.

மாநிலத்தில் கரோனா தொடர்பான இறப்பு எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ள இன்று 3 இறப்புகளும் பதிவாகியுள்ளன. இறந்தவர்கள் எர்ணாகுளம், கொல்லம் மாவட்டங்களைச் சேர்ந்த 59 வயதான பைஹைக்கி, 85 வயதான அலையம்மா, மற்றும் 56 வயதான ருக்மிணி ஆகியோர் ஆவர்.

திருவனந்தபுரம் மாவட்டத்தில் 320 பேர், எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த 132, பத்தனம் திட்டா மாவட்டத்தில் 130, வயநாடு மாவட்டத்தில் 124, கோட்டயம் மாவட்டத்தில் 89, கோழிக்கோடு மாவட்டத்தில் 84, பாலக்காடு மாவட்டத்தில் 83, மலப்புரம் மாவட்டத்தில் 75, திருச்சூர் மாவட்டத்தில் 60, இடுகி மாவட்டத்தில் 59 , கொல்லம் மாவட்டத்தில் 53, காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 52, ஆலப்புழா மாவட்டத்தில் 35, கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 பேர் கரோனா வைரஸ் நோயால் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட வாரியாகத் தொடர்பின் மூலம் ஏற்பட்ட கரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை திருவனந்தபுரம் மாவட்டத்தில் 311, பத்தனம்திட்டா மாவட்டத்தில் 127, வயநாடு மாவட்டத்தில் 124, எர்ணாகுளம் மாவட்டத்தில் 109, கோட்டயம் மாவட்டத்தில் 85, கோழிக்கோடு மாவட்டத்தில் 75, பாலக்காடு மாவட்டத்தில் 65, மலப்புரம் மாவட்டத்தில் 63, திருச்சூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் தலா 48, கொல்லம் மாவட்டத்தில் 44, இடுக்கி மாவட்டத்தில் 30, ஆலப்புழா மாவட்டத்தில் 29, கண்ணூர் மாவட்டத்தில் 4.

திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர், கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர், கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர், ஆலப்புழா, எர்ணாகுளம், மலப்புரம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒரு சுகாதாரப் பணியாளர்கள் என 20 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். திருச்சூர் மாவட்டத்தில் 4 கே.எஸ்.இ ஊழியர்கள் மற்றும் ஒரு கே.எல்.எஃப் ஊழியர், எர்ணாகுளம் மாவட்டத்தில் 20 ஐ.என்.எச்.எஸ் பணியாளர்கள் ஆகியோரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், சிகிச்சையில் உள்ள 864 நோயாளிகளுக்குப் பரிசோதனையின் மூலம் நோய்த்தொற்று நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 129, திருவனந்தபுரம் மாவட்டத்தில் 114, பாலக்காடு மாவட்டத்தில் 111, கொல்லம் மாவட்டத்தில் 94, கோழிக்கோடு மாவட்டத்தில் 75, எர்ணாகுளம் மாவட்டத்தில் 66, கோட்டயம் மாவட்டத்தில் 65, இடுக்கி மாவட்டத்தில் 45, பத்தனம்திட்டா மாவட்டத்தில் 44, கண்ணூர் மாவட்டத்திலிருந்து 41, திருச்சூர் மாவட்டத்தில் 27, ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த 25, வயநாடு மாவட்டத்தில் 19, மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 பேர் இந்த நோயிலிருந்து குணப்படுத்தப்பட்டவர்கள் ஆவர். இதுவரை, 13,027 பேர் இந்நோயிலிருந்து மீண்டுள்ளனர்,

தற்போது, ​​10,495 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது மாநிலம் முழுவதும் 1,43,323 பேர், வீடு அல்லது நிறுவன தனிமைப்படுத்தலின் கீழ் 1,33,151 பேர் மற்றும் மருத்துவமனைகளில் 10,172 பேர் உள்ளனர். 1,292 பேர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 22,279 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தற்போது வரை, மொத்தம் 7,76,268 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன, மேலும் 6,445 மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை. சென்டினல் கண்காணிப்பின் ஒரு பகுதியாக, சுகாதார ஊழியர்கள், விருந்தினர் தொழிலாளர்கள் மற்றும் அதிக சமூக வெளிப்பாடு உள்ள நபர்கள் போன்ற முன்னுரிமைக் குழுக்களிடமிருந்து 1,23,227 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

மேலும் 2,645 மாதிரிகளின் முடிவுகள் காத்திருக்கின்றன. இன்று, 14 புதிய இடங்கள் ஹாட்ஸ்பாட்களாக ஒதுக்கப்பட்டன, 11 இடங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தற்போது 498 ஹாட்ஸ்பாட்கள் உள்ளன''.

இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x