Last Updated : 31 Jul, 2020 03:53 PM

 

Published : 31 Jul 2020 03:53 PM
Last Updated : 31 Jul 2020 03:53 PM

வெளிநாடுகளில் இருந்து கலர்டிவி இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடு விதித்தது மத்திய அரசு

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி


உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்தவும், சீனா, வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதியைக் குறைக்கவும், வெளிநாடுகளில் இருந்து கலர் டிவி இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

மத்திய அரசின் புள்ளிவிவரங்கள்படி, கடந்த 2019-20ம் ஆண்டில் 78.10 கோடி டாலர் அளவுக்கு இந்தியா வெளிநாடுகளில் இருந்து கலர் டிவிக்களை இறக்குமதி செய்துள்ளது.

இதில் சீனாவிலிருந்து 29.20 கோடி டாலர்கள், வியட்நாமிலிருந்து மட்டும் 42.80 கோடி டாலர்கள் அளவுக்கு கலர் டிவிக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவுக்கு அதிகபட்சமாக சீனாதான் கலர் டிவிக்களை ஏற்றுமதி செய்து வருகிறது. அதற்கடுத்தார்போல் வியட்நாம், மலேசியா, ஹாங்காங், கொரியா, இந்தோனேசியா, தாய்லாந்து, ஜெர்மனி நாடுகள் இந்தியாவுக்கு கலர் டிவிக்களை ஏற்றுமதி செய்து வருகின்றன.

மத்திய அரசு கடைபிடித்து தற்சார்பு பொருளதாரக் கொள்கையை ஊக்கப்படுத்தும் விதத்தில் உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்தும் வகையில் வெளிநாடுகளில் இருந்து கலர்டிவிக்களை இறக்குமதி செய்ய மத்திய அ ரசு கட்டுப்பாடு கொண்டு வந்துள்ளது.

இதன்படி உள்நாட்டில் உள்ள இறக்குமதியாளர்கள் இனிமேல் வெளிநாடுகளில் இருந்து கலர் டிவி இறக்குமதி செய்ய வேண்டிய தேவை இருந்தால் அதற்கு வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் அனுமதி பெற்றுத்தான் இறக்குமதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது இறக்குமதிக்கு கட்டுப்பாடுள்ள பொருட்கள் பட்டியலில் கலர் டிவி கொண்டுவரப்பட்டுள்ளதால், இனிமேல் இறக்குமதி செய்யும் முன், வர்த்தக அமைச்சகத்தின் கீழ் உள்ள வெளிநாட்டுவர்தத்க இயக்குநரகத்தில் முன்அனுமதி பெற்று இறக்குமதி செய்ய வேண்டும்.

கிழக்கு லடாக் எல்லையில் சீனாவுடனான மோதலுக்கு பின், சீனாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அ ரசு எடுத்து வருகிறது. செல்போன்களில் பயன்படுத்திவரும் சீனாவின் 106 செயலிகளுக்கு மத்திய அரசு சமீபத்தில் தடை விதித்தது.

அரசின் சார்பில் நடக்கும் பல்வேறு கட்டுமானப் பணிகள், ரயில்வே பணிகள், தொலைத்தொடர்பு பணிகள் ஆகியவற்றிலிருந்து சீன நிறுவனங்களுக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்யப்பட்டன. இப்போது மறைமுகமாக கலர் டிவி இறக்குமதிக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x