

ஸ்ரீ நிவாச திருக்கல்யாண உற்சவம், வரும் 27-ம் தேதி சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நடைபெறும் என்று திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருமலை-திருப்பதி தேவஸ் தானத்தின் ஸ்ரீநிவாசம் திட்ட குழுவினர், நம்நாட்டில் மட்டுமின்றி வெளி நாடுகளிலும் ஸ்ரீநிவாச திருக் கல்யாண உற்சவங்களை வெகு விமரிசையாக நடத்தி வருகின்றனர். இதற்கு பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது.
இதுதொடர்பாக தேவஸ் தானம் சார்பில் வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
வரும் 5-ம் தேதி முதல் வரும் 27-ம் தேதி வரை 5 இடங்களில் ஸ்ரீநிவாச திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதில் வரும் 5-ம் தேதி,ஆந்திர மாநிலம் விஜய நகரம் மாவட்டம், கும்மலட்சுமிபுரத்திலும், 7-ம் தேதி விசாகப்பட்டினம் மாவட்டம், முடுகுலா மண்டலத்திலும், 11-ம் தேதி குண்டூர் மாவட்டம் ராஜ ஓலு கிராமத்திலும், 12-ம் தேதி கிழக்கு கோதாவரி மாவட்டம், ராமாவரம் மண்டலத்திலும் நடைபெறும்.
இதைத்தொடர்ந்து சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள எஸ்.எஸ்.எம்.வி. பி.எஸ். உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் வரும் 27-ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.