தற்சார்பு இந்தியா-சுதந்திர இந்தியா: “மைகவ்” இணையதள வினாடிவினா போட்டி

தற்சார்பு இந்தியா-சுதந்திர இந்தியா: “மைகவ்” இணையதள வினாடிவினா போட்டி
Updated on
1 min read

இளைஞர்கள், பொதுமக்களிடையே நாட்டுப்பற்று உணர்வை ஏற்படுத்த “மைகவ்” இணையதள, வினாடி வினா போட்டி நடைபெறுகிறது.

இந்த ஆண்டு சுதந்திரத் தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக “தற்சார்பு இந்தியா” கருத்துரு பெரிய அளவில் முன்னிலைப்படுத்தப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சகம், ”மைகவ்” இணையதளத்துடன் இணைந்து, ஜூலை 29-ந் தேதி முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை, “தற்சார்பு இந்தியா-சுதந்திர இந்தியா” என்ற தலைப்பில் இணையதள வினாடிவினாப் போட்டியை நடத்துகிறது. இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே நாட்டுப்பற்று உணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இது நடத்தப்படுகிறது.

இந்தப்போட்டியில் 10 பரிசுகள் வழங்கப்பட உள்ளன. முதல் பரிசாக ரூ.25,000, இரண்டாம் பரிசு ரூ.15,000, மூன்றாம் பரிசு ரூ.10,000 மற்றும் ஆறுதல் பரிசாக (7 பேருக்கு) ரூ.5,000-மும் அளிக்கப்பட உள்ளது. 14 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய இந்திய குடிமக்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம். இதற்கான இணையதள இணைப்பு - https://quiz.mygov.in/quiz/aatmanirbhar-bharat-swatantra-bharat-quiz/

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in