காஷ்மீர் எல்லையில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீர் எல்லையில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
Updated on
1 min read

காஷ்மீரில் சர்வதேச எல்லையில் ஊடுருவ முயன்ற 4 தீவிரவாதிகள் ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர்.

இது குறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, "காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா மாவட்டம் குரஸ் பகுதியில் சர்வதேச எல்லை வழியாக தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அப்போது எல்லை பாதுகாப்பு வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் 4 தீவிரவாதிகள் பலியாகினர். அவர்களிடம் இருந்து இரண்டு ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அப்பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் அடையாளம் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை' என்றார்.

எல்லையில் அத்துமீறல்:

ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டு வந்தாலும், எல்லையில் தொடர்ந்து ாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

இன்று (வெள்ளிக்கிழமை) நடந்த தாக்குதலில் பெரூதி எனும் எல்லை கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் முகமது அஷ்ரப் காயமடைந்தார்.

செப்டம்பர் மாதம் தொடங்கியதில் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 23 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

கடந்த மூன்று நாட்களில்மட்டும் 4 முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானின் அத்துமீறலில் எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் பலியானர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in