

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் நடைபெற்று வரும் கும்ப மேளா விழாவின் 2-வது அரச புனித நீராடல் நிகழ்ச்சி நேற்று கோலாகல மாக நடைபெற்றது. இதையொட்டி சாதுக்கள் உட்பட லட்சக் கணக் கான பக்தர்கள் கோதாவரி ஆற்றில் புனித நீராடினர்.
ராம் குந்த் பகுதியில் அதிகாலை 4 மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங் கியது. முன்னதாக, ஆயிரக்கணக் கான பக்தர்கள் மற்றும் மதத் தலைவர்கள் பேரணியாக ராம் குந்த் பகுதிக்குச் சென்றனர். பின்னர் அவர்கள் புனித நீராடினர்.
இதுதவிர நீராடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ராம் காட்ஸ் மற்றும் இதர பகுதிகளில் குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்கள் மற்றும் இதர பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் புனித நீராடினர்.
இந்த நிகழ்ச்சியை ஒட்டி நாசிக் போலீஸார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். எனினும், கடந்த மாதம் 29-ம் தேதி நடைபெற்ற முதல் புனித நீராடலின்போது மேற்கொள்ளப்பட்டிருந்த தடுப்புகள் சிறிதளவு தளர்த் தப்பட்டன.
இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடும் கட்டுப்பாட்டுக்கு கடந்த முறை பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததே இதற்குக் காரணம்.
மூன்றாவது மற்றும் இறுதி புனித நீராடல் நிகழ்ச்சி நாசிக்கில் வரும் 18-ம் தேதியும் திரிம்பகேஷ் வரில் 25-ம் தேதியும் நடைபெறு கிறது. இத்துடன் கும்ப மேளா விழா நிறைவடைகிறது.