

இந்தியாவில் மேலும் 47,704 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14.83 லட்சத்தை தாண்டியது.
ஒரே நாளில் 654 பேர் பலியானதால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் 33,425 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 35 ஆயிரத்து 176 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
நாட்டில் தற்போது குணமடைந்தோர் விகிதம் 64.23 சதவீதமாக உயர்ந்துள்ளது.
சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14 லட்சத்து 81 ஆயிரத்து 157. இதில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 4,96,988, குணமடைந்தொர் எண்ணிக்கை 9, 52,744. பலி எண்ணிக்கை இதுவரை 33,425.
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 47,704, பலியானோர் எண்ணிக்கை 654.
தொடர்ச்சியாக 6வது நாளாக ஒரேநாளில் 45,000த்திற்கும் மேற்பட்டோர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா பாதிப்பு எண்ணிக்கையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. மொத்தம் 1,48,905 பேர் இங்கு சிகிச்சையில் உள்லனர், பலி எண்ணிக்கை 13,656 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் மொத்தம் 11,904 பேர் சிகிச்சையில் உள்ளனர், பலி எண்ணிக்கை 3,827 ஆக உள்ளது.
தமிழ்நாட்டில் 53,703 பேர் இன்னமும் சிகிச்சையில் உள்ளனர், பலி எண்ணிக்கை 3,494 ஆக அதிகரித்துள்ளது.
ஒரேநாளில் 5 லட்சத்துக்கும் அதிகமான கரோனா டெஸ்ட் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜூலை 26ம் தேதி 5 லட்சத்து 15,000 கரோனா சாம்பிள்கள் சோதிக்கப்பட்டுள்ளன. ஜூலை 27ம் தேதி 5,28,000 சாம்பிள்கள் சோதிக்கப்பட்டுள்ளன.
ஜூலை 27ம் தேதி வரை பரிசோதனை செய்யப்பட்ட கரோனா சாம்பிள்கள் எண்ணிக்கை 1 கோடியே 73 லட்சத்து 34 ஆயிரத்து 885 ஆகும்.