

உலகில் இதுவரை நடந்திராத ஆன்லைன் ஹேக்கத்தான் போட்டியின் மாபெரும் இறுதிப் போட்டியில், பிரதமர் நரேந்திரமோடி, ஆகஸ்ட் 1-ம் தேதி அன்று காணொலி காட்சி வாயிலாக உரையாற்ற உள்ளார்.
உலகில் இதுவரை நடந்திராத ஆன்லைன் ஹேக்கத்தான் போட்டியின் மாபெரும் இறுதிச் சுற்றில், பிரதமர் நரேந்திரமோடி, 1 ஆகஸ்ட், 2020 அன்று இரவு 7 மணிக்கு, காணொலிக்காட்சி மூலம் உரையாற்ற உள்ளார். இன்று இத்தகவலை தெரிவித்துள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020 (Software) போட்டியின், மாபெரும் இறுதிச்சுற்று, 2020 ஆகஸ்ட் 1 முதல் 3ம் தேதி வரை நடைபெற உள்ளது என்றார்.
இந்த ஹேக்கத்தான் போட்டி, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில், பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் மற்றும் ஐ4சி ஆகியவற்றின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டிகள் குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் இன்று நடைபெற்ற உயர்மட்டக்குழு கூட்டத்தில், இதுவரை நடத்தப்பட்ட ஹேக்கத்தான் போட்டிகளின் சாதனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர், ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டிகள், நாடு எதிர்நோக்கும் சவால்களைக் களைவதற்கான, புதிய மற்றும் இடையூறு விளைவிக்கும் டிஜிட்டல் தொழில்நுட்ப புதுமைகளை அடையாளம் காண்பதற்கான ஒரு தனித்தன்மை வாய்ந்த முன்முயற்சி என்றார்.
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020-க்காக, மாணவர்களின் சிந்தனைகளைத் தேர்வு செய்வதற்கான கல்லூரிகள் அளவிலான முதற்கட்டப் பணி, கடந்த ஜனவரி மாதமே நடத்தப்பட்டு, கல்லூரி அளவில் வெற்றிபெற்ற அணிகள் மட்டுமே, தேசிய அளவிலான ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.