தனித்து போட்டியிட்டு ஆட்சியைப் பிடிக்க முடியும் என நான் உறுதி கூறியதால்தான் சிவசேனா கூட்டணியை பாஜக முறித்தது: மகாராஷ்டிர அமைச்சர் ஏக்நாத் காட்சே தகவல்

தனித்து போட்டியிட்டு ஆட்சியைப் பிடிக்க முடியும் என நான் உறுதி கூறியதால்தான் சிவசேனா கூட்டணியை பாஜக முறித்தது: மகாராஷ்டிர அமைச்சர் ஏக்நாத் காட்சே தகவல்
Updated on
1 min read

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர் தலில் தனித்து போட்டியிட்டாலே ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று நான் உறுதி அளித்ததால்தான் சிவசேனா உடனான கூட்டணியை பாஜக முறித்துக் கொண்டது என்று அம்மாநில வருவாய் அமைச்சர் ஏக்நாத் காட்சே தெரிவித்துள்ளார்.

தனது சொந்த மாவட்டமான ஜல்கானில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காட்சே மேலும் பேசியதாவது:

மகாராஷ்டிர தேர்தல் கூட்டணி தொடர்பாக டெல்லியில் மூன்று, நான்கு தடவை ஆலோசனை நடைபெற்றது. இதில் அமித் ஷா, நரேந்திர மோடி, நான், நிதின் கட்கரி மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது தனித்து போட்டியிட்டாலே ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று நான் கூறினேன். எனக்கு ஆதரவாக யாரும் பேசவில்லை.

தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் திடீரென கூட்டணியை முறித்துக் கொண்டால், காங்கிரஸ்-தேசிய வாத காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட்டால் என்ன செய்வது? என்று ஒருவர் சந்தேகம் எழுப்பினார்.

அப்போது மோடி என்னிடம் கூறும்போது, “பாஜக தனித்து போட்டியிட்டால் ஆட்சியைப் பிடிக்கும் என்று நீங்கள் கூறுகிறீர்கள். என்னுடைய கருத்தும் அதுதான். நீங்கள் கூறுவதுபோல் தனித்தே போட்டியிடலாம். ஆனால், இந்த முடிவை சிவசேனாவிடம் நீங்கள்தான் தெரிவிக்க வேண்டும். மற்றவர்கள் யாரும் (மகாராஷ்டிர பாஜக மூத்த தலைவர்கள்) இதற்குத் தயாராக இல்லை” என்றார்.

இதை நான் ஏற்றுக்கொண் டேன். அதன் பிறகுதான் சிவசேனா வுடனான 20 ஆண்டுகால கூட்டணியை முறித்துக் கொள்வது என முடிவு எடுக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்ட நிலையில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றி யது. ஆனால் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, தேவேந்திர பட்னாவிஸ் தலை மையில் பாஜகவும் சிவசேனாவும் மீண்டும் இணைந்து ஆட்சி அமைத்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in