Published : 27 Jul 2020 08:29 AM
Last Updated : 27 Jul 2020 08:29 AM

பிரதமரின் சவுபாக்யா திட்டத்தின் கீழ் காஷ்மீரின் தொலைதூர கிராமங்களுக்கு மின்சாரம்

நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்காக பிரதமரின் சவுபாக்யா திட்டத்தை மத்தியஅரசு கடந்த 2017-ல் தொடங்கியது. வறுமைக் கோட்டுக்கு கீழ்உள்ளவர்கள் ரூ.500 மின் இணைப்புக் கட்டணத்தை 10 தவணைகளில் மின்சாரக் கட்டணத்துடன் சேர்த்து செலுத்தலாம் என்பதால் கட்டணம் ஏதுமின்றி மின்இணைப்பு பெறமுடியும்.

இத்திட்டத்தின் கீழ் தெற்கு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டம்,கெல்லர் தாலுகா, துன்னாடி பகுதியில் உள்ள கிராமங்கள் முதல்முறையாக மின்சார இணைப்பு பெற்றுள்ளன. இந்த கிராமங்கள் செங்குத்தான மலைகள் மற்றும் காடுகளுக்குள் உள்ளன. இதனால்இவற்றுக்கு மின்சாரம் கொண்டு செல்வது மிகவும் சவாலான பணியாக இருந்தது. அண்மையில் அப்பகுதியில் உள்ள கிராமங்களில் 5 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு, அடுத்த 7 நாட்களில் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு தரப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கிராமங்கள் மின்சார வசதி பெற்றுள்ளன. இதுவரைமெழுகுவர்த்திகள் மற்றும் எண்ணெய் விளக்குகளையே பயன்படுத்தி வந்த கிராம மக்கள் தற்போது வித்தியாசமான அனுபவத்தை பெற்றுள்ளனர்.

இதுகுறித்து இங்குள்ள கிராமமக்கள் கூறும்போது, “இந்ததொலைதூரப் பகுதி கடைசியில்மின்சாரம் பெற்றுவிட்டதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. குழந்தைகள் மின்சார விளக்குகளில் படிக்கின்றன” என்றனர்.

மின்சார மேம்பாட்டு வாரியத்தின் இப்பகுதிக்கான உதவி செயற்பொறியாளர் பரூக் அகமது கூறும்போது, “இந்த கிராமங்கள் அதிக உயரத்தில் உள்ள மலை கிராமங்கள் என்பதால் இதுவரை மின் இணைப்பு தரப்படாமல் இருந்தது. சவுபாக்யா திட்டத்தின் கீழ் வீடுகள் அடையாளம் காணப்பட்டு இப்பகுதியை மின்மயமாக்கும் முயற்சி எடுக்கப்பட்டது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x