பாஜக-வை அதன் வழியிலேயே எதிர்க்க சமூகவலைத்தள உத்தி: திரிணமூல் அறிமுகம்

பாஜக-வை அதன் வழியிலேயே எதிர்க்க சமூகவலைத்தள உத்தி: திரிணமூல் அறிமுகம்
Updated on
1 min read

பாஜகவின் சமூகவலைத்தள பரப்புரையை எதிர்கொள்ள திரிணமூல் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ’பிரையன் ஒரு ‘ஷோஜா பங்ளே போல்ச்சி’ என்ற பரப்புரை சமூகவலைத்தள முயற்சியை அறிமுகம் செய்துள்ளார்.

இதன் மூலம் வாரத்திற்கு 3 நாட்கள் வீடியோ தொடர் வெளியாகும், இதில் திரிணமூல் ஆட்சியின் சாதனைகள் விளக்கப்படுவதோடு மத்திய ஆட்சி எப்படி கூட்டாட்சி தத்துவத்தைக் காலி செய்து வருகிறது என்பது பற்றியும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.

“ஞாயிறு, புதன், மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஒருநிமிட வீடியோ கிளிப் வெளியிடப்படும். இது அடுத்த 3 மாதங்களுக்கு மேற்கொள்ளப்படும் ” என்று திரிணமூல் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இந்த வீடியோக்களில் தற்காலத்திய சமூக, அரசியல், பொருளாதார விவகாரங்கள் பரிசீலிக்கப்படும். மேலும், “கடந்த 9 ஆண்டுகளாக மம்தாவின் ஆட்சியில் மேற்கு வங்கம் எப்படி நல்ல வளர்ச்சியுற்றது என்பதிலும் கவனம் செலுத்தும். கூட்டாட்சி தத்துவம் எப்படி அரிக்கப்படுகிறது, மாநில அரசுகள் எப்படி முடக்கப்படுகின்றன என்பது பற்றியும் பிரதான கவன கொள்ளும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திரிணமூல் ஆட்சி மற்றும் கட்சிக்கு எதிராக, பாஜக சமூகவலைத்தளப் பிரிவு உருவாக்கும் “போலி செய்திகள், கட்டுக்கதைகள்” ஆகியவற்றை முறியடிப்பதாக இருக்கும் என்று திரிணமூல் அறிக்கை கூறுகிறது.

2019 லோக்சபா தேர்தலில் 42 இடங்களில் பாஜக 18 இடங்களை வென்று சட்டப்பேரவை தேர்தலில் திரிணமூலுக்கு கடும் சவால்களை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in