Published : 26 Jul 2020 01:12 PM
Last Updated : 26 Jul 2020 01:12 PM

முற்றிலும் டிஜிட்டல் மூலம் பரிவர்த்தனை மேற்கொள்ளும் தெருவோர வியாபாரிகளுக்கும் ஊக்கத்தொகை அளிக்கும் திட்டம்: பிரதமர் பரிசீலனை

முற்றிலும் டிஜிட்டல் மூலமாக பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் தெருவோர வியாபாரிகளுக்கு ஊக்கத்தொகை அளிக்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஸ்வநிதி திட்ட செயல்பாடு குறித்து பரிசீலனை செய்து வருகிறார்.

தெரு வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் கண்ணோட்டத்துடன் மட்டுமல்லாமல், அவர்களின் முழுமையான வளர்ச்சிக்கும் பொருளாதார மேம்பாட்டுக்கும் அவர்களைச் சென்றடையும் திட்டமாக இது அமைய வேண்டும் என்று மோடி விரும்புகிறார்.

மத்தியவீட்டுவசதி நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின், பிரதமர் ஸ்வநிதி திட்டத்தின் செயல்பாடு குறித்து பிரதமர் நரேந்திர மோடி பரிசீலித்தார்.

இத்திட்டத்தின் கீழ் இதுவரை 2.6 லட்சம் விண்ணப்பங்கள் வரப்பெற்றன என்றும்,64 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுவிட்டதாகவும்,5,500க்கும் அதிகமான விண்ணப்பதாரர்களுக்கு கடன் தொகை விநியோகிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இணையதளம் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் இந்தத் திட்டம் விரைவாகவும், பொறுப்புணர்வுடனும், வெளிப்படைத் தன்மையுடனும் செயல்படுவதை உறுதிசெய்யும் வகையில் முதலிலிருந்து, இறுதிவரை டிஜிட்டல் முறை பின்பற்றப்படுவது குறித்து அவர் திருப்தி தெரிவித்தார்.

மத்திய வீட்டுவசதி நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் இத்திட்டத்தில் சுமுகமான முறையில் செயல்படுத்துவதற்காக, முழுமையான தகவல் தொழில்நுட்பத் தீர்வு அளிப்பது குறித்தும், அலைபேசிச் செயலி உருவாக்கம் குறித்தும், மேற்கொண்டுள்ள முயற்சிகளை கவனத்தில் கொண்ட பிரதமர், தெரு வியாபாரிகள் முற்றிலும் டிஜிட்டல் மயமாக பரிவர்த்தனைகளை மேற்கொண்டால், அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும் என்று கூறினார். அவர்களுடைய ஒட்டுமொத்த வர்த்தகமும் கச்சாப் பொருள்களைப் பெறுவது முதல் விற்பனை செய்த பொருள்களுக்கான தொகையை வசூலிப்பது வரை அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட வேண்டும் என்று பிரதமர் கூறினார்.இதற்கான ஊக்கத்தொகையும், தகுந்த பயிற்சியும் அளிக்கப்பட வேண்டும். தெரு வியாபாரிகள் டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதன் மூலமாக அவர்களது கடன் விவரங்கள் பதியப் பெற்று, எதிர்காலத்தில் அவர்களுக்குத் தேவையான கடன் பெறுவதற்கு அது உதவும்.

தெரு வியாபாரிகளுக்குக் கடன் அளிப்பது என்ற கண்ணோட்டத்துடன் மட்டுமே இந்தத் திட்டம் பார்க்கப்படக்கூடாது என்று பிரதமர் கூறினார். தெரு வியாபாரிகளின் ஒட்டுமொத்த வளர்ச்சி, அவர்களது பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்காக அவர்களைச் சென்றடையும் திட்டத்தின் ஒரு பகுதியாகஇது பார்க்கப்படவேண்டும். அவர்களைப் பற்றிய சமூக, பொருளாதார விவரங்கள் அனைத்தையும் பதிவு செய்து கொள்வதன் மூலம், தேவையான கொள்கை முடிவுகளை மேற்கொள்ளும் வகையில் தகவல்களைச் சேகரிப்பது இந்தத் திசையிலான ஒரு முயற்சியாக இருக்கும். இந்த விவரங்கள், அரசின் பல்வேறு அமைச்சகங்களின் கீழான பல்வேறு திட்டங்களுக்கும், பயன்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் இவர்கள் இத்திட்டங்களின் கீழ் பயன்பெற உதவும். பி எம் ஏ வை திட்டத்தின்கீழ் வீட்டுவசதி, உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு, சௌபாக்யா திட்டத்தின் கீழ் மின்சார வசதி, ஆயுஷ்மான் இந்தியா திட்டத்தின் கீழ் உடல் நல உதவி, டி ஏ வை என் யூ எல் எம் திட்டத்தின் கீழ் பயிற்சி பெறுதல், ஜன்தன் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு தொடங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ், தெரு வியாபாரிகள் பயனடைய முடியும்..

பின்னணி:

பிரதமர் ஸ்வநிதித் திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தெரு வியாபாரிகள் தங்களது வியாபாரத்தை மீண்டும் தொடங்குவதற்காக பணி மூலதனக் கடனாக சுமார் 50 லட்சம் தெரு வியாபாரிகளுக்கு, பத்தாயிரம் ரூபாய், ஓராண்டு காலக் கடனாக பிணை ஏதுமின்றி வழங்கப்படுகிறது. கடன் தொகையை உரிய காலத்தில் செலுத்துபவர்களுக்கு, வட்டி மானியம் ஆண்டொன்றுக்கு 7 சதவிகிதமும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்பவர்களுக்கு ஆண்டொன்றுக்கு 1200 ரூபாய் ரொக்கமும் வழங்கப்படுகிறது.24 சதவிகித ஆண்டு வட்டியில் பத்தாயிரம் ரூபாய் கடனாகப் பெற்றால் கடனுக்கான வட்டிச் சுமையில் மொத்தத்தில் 30 சதவிகிதம் குறையும் வகையில் வட்டி மானியம் அமைந்துள்ளது.

இதனால் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது வியாபாரி, தான் பெறும் கடன் தொகைக்கு எந்தவிதமான வட்டியும் செலுத்துவது என்பதற்கு மாறாக, உரிய காலத்தில் கடனைத் திருப்பி செலுத்தினால், தன்னுடைய அனைத்து பணப்பரிவர்த்தனைகளையும் டிஜிட்டல் முறையில் செய்தால், கடன் தொகையில் அவருக்கு மானியம் கிடைக்கிறது.

அதுமட்டுமல்லாமல் உரிய காலத்தில் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தினால் அல்லது முன்னதாகவே கடனை திருப்பிச் செலுத்தினால், அவருக்கு அடுத்த முறை கடன் பெறும் போது கூடுதலாகக்கடன் வழங்குவதற்கும் இத்திட்டம் வகை செய்கிறது. 2 ஜூலை 2020 முதல் கடன் வழங்கப்படும் முறை தொடங்கியது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான முகமை இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கியின்பிரதமர் ஸ்வநிதி “PM SVANidhi”இணையதளத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x