

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவுக்கு புதிதாக 48 ஆயிரத்து 661 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர், 705 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 48 ஆயிரத்து 661 பேர் புதிதாக பாதிக்கப்பட்டதையடுத்து, ஒட்டுமொத்த பாதிப்பு 13 லட்சத்து 85 ஆயிரத்து 522 ஆக அதிகரித்துள்ளது. ஆறுதல் அளிக்கும் விதத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 85 ஆயிரத்து 576 ஆக உயர்ந்து, 64 சதவீதத்தை எட்ட உள்ளது.
கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 67 ஆயிரத்து 882 ஆக அதிகரி்த்துள்ளது. தொடர்ந்து 4-வது நாளாக நாள்தோறும் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக கரோனாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவுக்கு 705 பேர் உயிரிழந்ததையடுத்து, ஒட்டுமொத்த உயிரிழப்பு 32 ஆயிரத்து 63 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 257 பேரும், தமிழகத்தில் 89 பேரும், கர்நாடகாவில் 72 பேரும் உயிரிழந்தனர்.
ஆந்திாவில் 52 பேரும், மேற்கு வங்கத்தில் 42 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 39 பேரும், டெல்லியில் 29 பேரும், குஜராத்தில் 22 பேரும், பிஹாரில் 14 பேரும் உயிரிழந்தனர். ஜார்க்கண்டில் 12 பேரும், ராஜஸ்தானில் 11 பேரும், ஒடிசாவில் 10 பேரும் கரோனாவில் பலியாகியுள்ளனர்.
பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீரில் தலா 9 பேரும், மத்தியப்பிரதேசத்தில் 8 பேரும், ஹரியாணாவில் 7 பேரும், கேரளாவில் 5 பேரும், கோவாவில் 4 பேரும், புதுச்சேரி, உத்தரகாண்ட், நாகாலந்தில் தலா 3 பேரும், அசாம், லடாக்கில் தலா ஒருவரும் உயிரிழந்தனர்.
இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 13,389 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள டெல்லியில் உயிரிழப்பு 3,806 ஆகவும், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 3,409 ஆகவும், குஜராத்தில் உயிரிழப்பு 2,300 ஆகவும் அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 1,332 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 799 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 1,387 ஆகவும், ராஜஸ்தானில் உயிரிழப்பு 613 ஆகவும் அதிகரித்துள்ளது.
தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 455 ஆகவும், ஹரியாணாவில் 389 ஆகவும், ஆந்திராவில் 985 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 1,796 பேரும், பஞ்சாப்பில் 291 பேரும் பலியாகியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 305 பேரும், பிஹாரில் 234 பேரும், ஒடிசாவில் 130 பேரும், கேரளாவில் 59 பேரும், உத்தரகாண்டில் 63 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 11 பேரும், ஜார்க்கண்டில் 82 பேரும், அசாமில் 77 பேரும், திரிபுராவில் 11 பேரும், மேகாலயாவில் 5 பேரும், நாகாலாந்தில் 4 பேரும், அருணாச்சலப் பிரதேசத்தில் 3 பேரும், தாதர் நகர் ஹவேலி, டையூ டாமனில் தலா இருவரும் உயிரிழந்துள்ளனர். கோவாவில் 33 பேர், புதுச்சேரியில் 38 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 66 ஆயிரத்து 368 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 2,07,194 ஆக உயர்ந்துள்ளது.
2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 749 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,43,297 ஆகவும் அதிகரித்துள்ளது.
டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,29,531 பேராக அதிகரித்துள்ளது. 1,10,068 பேர் குணமடைந்துள்ளனர். 4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 54,626 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 39,631 பேர் குணமடைந்தனர்.
ராஜஸ்தானில் 35,298 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 26,926 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 63,742 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 56,377 பேரும், ஆந்திராவில் 88,671 பேரும், பஞ்சாப்பில் 12,684பேரும், தெலங்கானாவில் 52,466 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 17,035 பேர், கர்நாடகாவில் 90.942 பேர், ஹரியாணாவில் 30,548 பேர், பிஹாரில் 36,604 பேர், கேரளாவில் 18,098 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,611 பேர் குணமடைந்துள்ளனர்.
ஒடிசாவில் 24,013 பேர், சண்டிகரில் 852 பேர், ஜார்க்கண்டில் 7,836 பேர், திரிபுராவில் 3,862 பேர், அசாமில் 31,086 பேர், உத்தரகாண்டில் 5,961 பேர், சத்தீஸ்கரில் 7,057 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 1,954 பேர், லடாக்கில் 1,276 பேர், நாகாலாந்தில் 1,289 பேர், மேகாலயாவில் 646 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாதர் நகர் ஹவேலியில் 815 பேர், புதுச்சேரியில் 2,654பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 1,561 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 361 பேர், சிக்கிமில் 499 பேர், மணிப்பூரில் 2,176 பேர், கோவாவில் 4,450 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அருணாச்சலப் பிரதேசத்தில் 1,126 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் 290 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.