Last Updated : 25 Jul, 2020 03:08 PM

 

Published : 25 Jul 2020 03:08 PM
Last Updated : 25 Jul 2020 03:08 PM

கரோனாவில் கவனம் செலுத்துங்கள், விளம்பரத்தில் அல்ல: யோகி ஆதித்யநாத்திற்கு பிரியங்கா காந்தி கடிதம்

கரோனா வைரஸ் பரவல் அதிகமாகிக் கொண்டிருக்கிறது, ஆனால் உ.பி. மாநில யோகி ஆதித்யநாத் தலைமை பாஜக அரசு செய்திகளை கட்டுப்படுத்துவதிலும் விளம்பரத்திலும் கவனம் செலுத்தி வருகிறது என்று பிரியங்கா காந்தி வதேரா குற்றம்சாட்டியுள்ளார்.

பிரியங்கா காந்தி கூறியிருப்பதாவது:

உத்தரப் பிரதேசத்தில் கரோனா பரவலுடன், பயங்கரமான பிரச்சினைகளும் வந்து கொண்டிருக்கின்றன. படுக்கைகள் போதாமை நிலவுகிறது. மருத்துவமனைகளில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கிறார்கள். பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கான்பூர், லக்னோ, கோரக்பூர், வாரனாசியிலிருந்து வரும் தகவல்கள் நல்ல அறிகுறியாகத் தெரியவில்லை. நான் முதல்வருக்கு சில ஆரோக்கியமான ஆலோசனைகளை வழங்கியிருக்கிறேன்.

உ.பி. அரசு தன் பிடிவாதப்போக்கைக் கைவிட்டு வெளிப்படையாக மக்கள் நல திட்டங்களை வகுக்க வேண்டும்.

நேற்று 2,500க்கும் மேற்பட்டோர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது பெரு நகரங்களுடன் கிராமப்புறங்களும் கரோனாவின் பிடியில் சிக்கியுள்ளன. உங்கள் அரசு நோ-டெஸ்ட்-நோ கரோனா கொள்கையைக் கடைப்பிடிப்பதாகத் தெரிகிறது.

கரோனா நோய்க்கான பரிசோதனை அதிகரிக்கப்படாதவரை அதற்கு எதிரான நம் போர் விரயமே. இதனால் சூழ்நிலை ஆபத்தாகவே மாறும்.

தனிமை மையங்களும், மருத்துவமனைகளும் மோசமான ஸ்திதியில் உள்ளன. அதாவது மக்கள் கரோனாவைக் கண்டு அஞ்சுவதை விட உங்கள் அரசின் ஏற்பாடுகள் கண்டு அச்சப்படுகின்றனர். உங்கள் அரசு 1.5 லட்சம் படுக்கைகள் இருப்பதாக கோருகிறது. ஆனால் 20,000 குறைவாக இருப்பதாகவே தெரிகிறது.

டிஆர்டிஓ ராணுவம் மற்றும் துணைராணுவம் தற்காலிக மருத்துவமனைகளை உருவாக்க முடியும்.

சூழல் மோசமாகி வருகிறது, கரோனாவுக்கு எதிரான போரில் வெறுமனே செய்திகளை கட்டுப்படுத்துவதினாலும் விளம்பரங்களினாலும் வெல்ல முடியாது. நீங்கள் என் ஆலோசனைகளை அரசியல்மயமாக்கியே புரிந்து கொள்வீர்கள், எப்படி புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பேருந்துகள் விவகாரத்தில் செய்தீர்களோ அப்படி.

இவ்வாறு தன் கடிதத்தில் பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x