Published : 25 Jul 2020 08:57 AM
Last Updated : 25 Jul 2020 08:57 AM

எல்லையில் பெரும்பாலான இடங்களில் சீனா இன்னும் படைநீக்கம் செய்யவில்லை- அமெரிக்க உளவுத்துறை தகவல்

இந்திய-சீன எல்லையில் கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் சில இடங்களில் இன்னும் சீனா முழுதும் படை நீக்கம் செய்யவில்லை என்பதோடு தன் படைக்குவிப்பை இன்னும் குறைக்கவில்லை என்று புதிதாக வெளியாகியுள்ள தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

செயற்கைக் கோள் படங்களை வைத்து அமெரிக்காவில் உள்ள உளவு அமைப்பான ஸ்ட்ராட்ஃபார் இதனை தெரிவித்துள்ளது.

ஜூலை 22ம் தேதி வெளியான இந்த அறிக்கையின்படி லடாக் செக்டாரில் எல்.ஏ.சி என்று அழைக்கப்படும் கட்டுப்பாட்டு எல்லைக் கோடு அருகே புதிதாக 50 சீன முகாம்களும், துணை முகாம்களும், ஹெல்போர்ட்களும் காணப்படுகின்றன.

இருநாடுகளுக்கும் இடையிலான 1993ம் ஆண்டு அமைதி மற்றும் சமாதான ஒப்பந்தங்களின் படி எல்.ஏ.சி பகுதியில் இரு தரப்பினரும் தங்கள் படைகளை குறைந்த அளவில் மட்டுமே வைத்திருக்க வேண்டும், இருதரப்புக்கும் இடையே நல்ல நட்புறவு நீடிக்க வேண்டும் என்பது ஒப்பந்தமாகும்.

இதே ஒப்பந்தம் 1996-ல் பரஸ்பர நம்பிக்கை கட்டுமான அடிப்படையில் மீண்டும் உறுதி செய்யப்பட்டது. ஆனால் இப்போது சீனா அப்பகுதியில் சர்ச்சைக்குரிய வகையில் தன் அமைப்புகளை நிறுவி வருகிறது என்கிறது அமெரிக்க உளவுத்துறை அமைப்பான ஸ்ட்ராட்ஃபார்.

இந்த புதிய அறிக்கையைத் தயாரித்த சிம் டேக் என்பவர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறும்போது, “சீனாவின் நிரந்தர மற்றும் அரை-நிரந்தர நிலையிலான கட்டுமானங்கள் காணப்படுகின்றன, இதில் சில ஏற்கெனவெ உள்ள நிரந்தர உள்கட்டமைப்புடன் சேர்க்கப்பட்டுள்ளது. புதிதானக் கட்டுமானங்களில் பெரிய டெண்ட்கள், வாகன நிறுத்துமிடங்கள். ஆர்ட்டிலரி நிலைஅக்ள் ஆகியவை காணப்படுகின்றன” என்றார்.

“லடாக் அருகே சீனா கடந்த மே மாதம் முதலே எல்லைப்பகுதியில் தன் ராணுவ இருப்பை அதிகப்படுத்தும் வேலையையும், நீராதார உரிமைகோரல்களையும் மேற்கொண்டு வருகிறது” என்கிறது இந்த உளவுத்துறை அறிக்கை. இந்தக் கோடைக் காலத்தில் மட்டும் சர்ச்சைக்குரிய எல்லைப்பகுதியில் 10,000 துருப்புகளை சீனா சேர்த்திருக்கிறது, என்று இந்த அறிக்கை கூறுகிறது.

கார்ப்ஸ் கமாண்டர்கள் மட்ட பேச்சு வார்த்தைகளுக்கு இணங்க கல்வான் பள்ளத்தாக்கு, ஃபிங்கர் 4 பகுதி, ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியில் சீனா தன் நிலையிலிருந்து பின் வாங்கியிருந்தாலும் சீனாவின் முன்னணி படை நிலவரத்தில் மாற்றம் ஏற்படவில்லை. ஃபிங்கர் 8 பகுதியில் இந்தியா தன் பகுதி என்று கருதும் பகுதியில் சீனாவின் 4 புதிய முகாம்கள் இன்னமும் கூட காணப்படுகின்றன என்கிறது இந்த அமெரிக்க உளவு அமைப்பின் அறிக்கை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x