Last Updated : 24 Jul, 2020 11:18 AM

 

Published : 24 Jul 2020 11:18 AM
Last Updated : 24 Jul 2020 11:18 AM

8 லட்சம் பேர் குணமடைந்தனர்: இந்தியாவில் கரோனா பாதிப்பு 13 லட்சத்தை நெருங்குகிறது; உயிரிழப்பு 30 ஆயிரத்தைக் கடந்தது

இந்தியாவில் இதுவரை இல்லாதவகையில் அதிகபட்சமாக கடந்த 24 மணிநேரத்தில் 49 ஆயிரத்து 310 பேர் புதிதாக நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர், 740 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 12 லட்சத்து 87 ஆயிரத்து 945 ஆக அதிகரித்து, 13 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதில் ஆறுதல் அளிக்கும் விதமாக கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்தைக் கடந்து, 8 லட்சத்து 17 ஆயிரத்து 208 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 63.45 ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவில் கடந்த 24 மணிநேரத்தில் 740 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழப்பு 30 ஆயிரத்து 601 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் நேற்று 298 பேர் உயிரிழந்தனர். கர்நாடகாவில் 97 பேர், தமிழகத்தில் 88 பேர், ஆந்திராவில் 61 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு வங்கத்தில் 34 , குஜராத்தில் 28,உத்தரப்பிரதேசம், டெல்லியில் தலா 26, ராஜஸ்தானில் 11, மத்தியப்பிரதேசத்தில் 10 பேர், ஜம்மு காஷ்மீர், தெலங்கானாவில் தலா 9 பேர் பலியாகியுள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தில் 8 பேர், அதைத்தொடர்ந்து அசாம், ஒடிசா, ஹரியானாவில் தலா 6 பேர், கேரளாவில் 5 பேர், உத்தரகாண்ட், ஜார்கண்ட், புதுச்சேரியில் தலா 3 பேர், சத்தீஸ்கர், திரிபுரா, கோவாவில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 12,854 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள டெல்லியில் உயிரிழப்பு 3,745 ஆகவும், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 3,232 ஆகவும், குஜராத்தில் உயிரிழப்பு 2,252 ஆகவும் அதிகரித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 1,255 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 770 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 1,289 ஆகவும், ராஜஸ்தானில் உயிரிழப்பு 594 ஆகவும் அதிகரித்துள்ளது.

தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 447 ஆகவும், ஹரியாணாவில் 378 ஆகவும், ஆந்திராவில் 884 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 1,616 பேரும், பஞ்சாப்பில் 269 பேரும் பலியாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 282 பேரும், பிஹாரில் 217 பேரும், ஒடிசாவில் 114 பேரும், கேரளாவில் 50 பேரும், உத்தரகாண்டில் 60 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 11 பேரும், ஜார்க்கண்டில் 64 பேரும், அசாமில் 64 பேரும், திரிபுராவில் 10 பேரும், மேகாலயாவில் 4 பேரும், அருணாச்சலப் பிரதேசத்தில் 3 பேரும், தாதர் நகர் ஹவேலி, டையூ டாமனில் தலா இருவரும் உயிரிழந்துள்ளனர்.கோவாவில் 29 பேர், புதுச்சேரியில் 34 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 47 ஆயிரத்து 502 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,94,253 ஆக உயர்ந்துள்ளது.
2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 974 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,36,793 ஆகவும் அதிகரித்துள்ளது.

டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,27,364 பேராக அதிகரித்துள்ளது. 1,09,065 பேர் குணமடைந்துள்ளனர். 4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 52,477 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 37,978 பேர் குணமடைந்தனர்.

ராஜஸ்தானில் 33,220 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 25,474 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 58,104 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் 51,757 பேரும், ஆந்திராவில் 72,711 பேரும், பஞ்சாப்பில் 11,739பேரும், தெலங்கானாவில் 50,826 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 16,429 பேர், கர்நாடகாவில் 80,863 பேர், ஹரியாணாவில் 28,975 பேர், பிஹாரில் 31,980 பேர், கேரளாவில் 16,110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,594 பேர் குணமடைந்துள்ளனர்.

ஒடிசாவில் 21,099 பேர், சண்டிகரில் 800 பேர், ஜார்க்கண்டில் 6,975 பேர், திரிபுராவில் 3,449 பேர், அசாமில் 28,791 பேர், உத்தரகாண்டில் 5,300 பேர், சத்தீஸ்கரில் 6,254 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 1,834 பேர், லடாக்கில் 1,210 பேர், நாகாலாந்தில் 1,174 பேர், மேகாலயாவில் 534 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தாதர் நகர் ஹவேலியில் 770 பேர், புதுச்சேரியில் 2,420 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 1,400 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 332 பேர், சிக்கிமில் 460 பேர், மணிப்பூரில் 2,115 பேர், கோவாவில் 4,350 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அருணாச்சலப் பிரதேசத்தில் 991 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் 240 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x