

மும்பையை அடுத்துள்ள ராய்கட் மாவட்ட வனப்பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் உடல் ஷீனா போராவுடையதுதான் என டிஎன்ஏ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ராய்கட் வனப் பகுதி யில் எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் சடலத்தை போலீஸார் கண்டெடுத்தனர். அவற்றில் சில பாகங்களை எடுத்துக்கொண்டு மீதியை அதே இடத்தில் புதைத்து விட்டனர். இதுகுறித்து போலீ ஸார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஸ்டார் இந்தியா நிறுவன முன்னாள் தலைமை செயல் அதிகாரி பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி தனது மகள் ஷீனாவை 3 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்ததாக அவரது கார் டிரைவர் ஷ்யாம் ராய் போலிஸில் தகவல் தெரிவித்தார். இதையடுத்து இந்திராணி, அவரது 2-வது கணவர் சஞ்சீவ் கண்ணா, ஷ்யாம் ராய் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரித்து வரு கின்றனர்.
இதற்கிடையே, ஷீனாவின் உடலை புதைத்த இடத்திலிருந்து சில பாகங்களை தோண்டி எடுத்த போலீஸார் அவை ஷீனாவுடையது தானா என்பதை உறுதி செய்வ தற்காக தடய அறிவியல் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி னர். இந்நிலையில், ராய்கட் வனப் பகுதியில் தோண்டி எடுக்கப்பட்ட உடல் பாகங்களின் டிஎன்ஏ மாதிரிகள் இந்திராணியிடம் எடுக் கப்பட்ட ரத்த மாதிரியுடன் ஒத்துப் போவதாக நேற்று தகவல் வெளியானது.
இதற்கிடையே, மேற்கண்ட 3 பேரின் போலீஸ் காவல் முடிந்ததையடுத்து, இந்திராணி, ஷ்யாம் ராய் ஆகிய இருவரையும் போலீஸார் நேற்று பாந்த்ரா பெரு நகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சஞ்சீவ் கண் ணாவை கொல்கத்தாவுக்கு அழைத் துச் சென்றதால் அவரை ஆஜர் படுத்த முடியவில்லை என அரசுத் தரப்பு வழக்கறிஞர் வைபவ் பகாதே நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதையடுத்து இந்திராணி முகர்ஜி, ஷ்யாம் ராய் ஆகிய இருவரையும் 14 நாட்களுக்கு (செப்டம்பர் 21) நீதிமன்றக் காவ லில் வைக்க நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மேலும் சஞ்சீவ் கண்ணாவை செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டது.
கொல்கத்தாவில் சஞ்சீவ்
இதற்கிடையே, இந்திராணியின் 2-வது கணவர் சஞ்சீவ் கண் ணாவை மும்பை போலீஸார் நேற்று கொல்கத்தாவுக்கு அழைத் துச் சென்றனர். அவரது வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீ ஸார் வழக்கு தொடர்பான சில ஆவணங்களை திரட்டியதாகவும் தங்களிடம் எந்த உதவியும் கோர வில்லை என்றும் கொல்கத்தா போலீஸார் தெரிவித்தனர். பின்னர் போலீஸார் கண்ணாவை அழைத்துக்கொண்டு மும்பைக்கு திரும்பிவிட்டனர்.
வழக்கு பின்னணி
பீட்டர் முகர்ஜியை, 3-வதாக திருமணம் செய்த இந்திராணி, தனது முதல் கணவர் சித்தார்த் தாஸுக்கு பிறந்த ஷீனா, மைக்கேல் ஆகிய இருவரையும் தனது சகோதர, சகோதரிகள் என்று அறிமுகப்படுத்தி உள்ளார்.
இந்நிலையில், பீட்டர் முகர்ஜியின் முதல் மனைவிக்கு பிறந்த ராகுலை காதலித்தது பிடிக்காமல், 2012-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி ஷீனாவை இந்திராணியும் அவரது 2-வது கணவர் சஞ்சீவ் கண்ணாவும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்த தாகக் கூறப்படுகிறது. பின்னர் சடலத்தை ராயகட் வனப்பகுதி யில் போட்டுவிட்டு வந்துள்ளனர். இதற்கு ஷ்யாம் ராய் உதவி செய்துள்ளார் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஷீனாவை கொன்ற பிறகு வனப்பகுதிக்கு எடுத்துச் செல் வதற்கு முன்பு பீட்டரின் வீட்டில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் உடலை வைத்திருந்ததாகக் கூறப் படுகிறது. எனவே, இந்த சம்பவத்தை நடித்துக் காட்டு வதற்காக, இந்திராணியை பீட்ட ரின் வீட்டுக்கு நேற்று அழைத்துச் சென்ற போலீஸார் இருவரிடமும் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கு தொடர்பாக ஷீனாவின் சகோதரர் மைக்கேல் போரா, தந்தை சித்தார்த் தாஸ் உள்ளிட்டோரிடமும் போலீ ஸார் விசாரணை நடத்தி உள் ளனர். இந்தக் கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.